School Morning Prayer Activities - 10.10.2024 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2024

School Morning Prayer Activities - 10.10.2024

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.10.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: நட்பு ஆராய்தல்

குறள் எண்:799


கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடும்காலை

உள்ளினும் உள்ளம் சுடும்.


பொருள்:கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.


பழமொழி :

A bad day never hath a good night.


 முதல் கோணல் முற்றும் கோணல்.


இரண்டொழுக்க பண்புகள் :  


*தேர்வில் எழுதத் தவறிய வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்வேன்.                               


*தேர்வு விடைத்தாள்களை திருப்பிப் பார்த்து எனது தவறுகளை திருத்திக் கொள்வேன்.


பொன்மொழி :


பெரிதாக யோசி, சிறிதாக தொடங்கு, ஒரே நாளில் உயர்ந்து விட முடியாது. 


பொது அறிவு


1. உலகின் மிகப்பெரிய உப்பு ஏரி எந்த நாட்டில் உள்ளது?


விடை: ரஷ்யா 


 2. அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது?


விடை: தாய்லாந்து 


English words & meanings :


 Daft – silly; foolish.

 குழந்தைத்தனமான,முட்டாள்தனமான. 


Dairy - a place on a farm where milk is kept and butter, cheese, etc. are made..பால் பண்ணை


வேளாண்மையும் வாழ்வும் : 


வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விடயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும். அந்த அளவு வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. 


அக்டோபர் 10 இன்று


உலக மனநல நாள்


உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாக கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.


நீதிக்கதை


 பேசும் குகை 


வெகு காலத்துக்கு முன்பு மிருகங்களின் ராஜாவாகிய சிங்கம் ஒரு காட்டில் வசித்து வந்தது. அங்கு இருந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தை பார்த்து பயந்து வாழ்ந்து வந்தனர். ஒருநாள் சிங்கம் இரையைத் தேடி காட்டில் அலையும் போது ஒரு குகையை கண்டது.


உள்ளே சென்று பார்க்கும் போது அங்கே யாரும் இல்லை. “நிச்சயமாக இங்கே யாரோ வசித்து வருகிறார்கள், அவர்கள் வரும் வரை இங்கே இருந்தால் நிச்சயமாக பெரிய விருந்து இன்றைக்கு உண்டு” என்று சிங்கம் தனக்குத்தானே பேசிக்கொண்டு, அங்கே ராஜா போல் அமர்ந்து இருந்தது.


மாலை நேரத்தில் அங்கு வசித்து வந்த குள்ள நரி திரும்பி வந்து பார்க்கும்போது வெளியே சிங்கத்தின் கால்தடங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தது. “இப்போது நான் உள்ளே சென்றால் நானே அபாயத்தை ஏற்படுத்தியது போல் இருக்கும்” என்று குள்ளநரி எண்ணியது.


“ஆனால் குகைக்குள் சிங்கம் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது” புத்திசாலியான குள்ளநரி மனதில் ஒரு திட்டமிட்டது. “ஓ..குகையே” 


என்று பெரிய சத்தத்தில் நரி கத்தியது.  இதைக் கேட்டு சிங்கம் சந்தோஷப்பட்டாலும் சத்தமிடாமல் பதுங்கி இருந்தது. மீண்டும் குள்ள நரி சத்தமாக,


” ஓ குகையே நீ ஏன் இன்று மௌனமாக இருக்கிறாய்” என்று கேட்டது.


நரி குகையிடம் பேசுவது அதிசயமாக இருந்தாலும் சிங்கம் அமைதியாகவே இருந்தது. மீண்டும் குள்ளநரி, “ஓ குகையே உனக்கு என்ன ஆயிற்று. எல்லா நாளும் நான் திரும்பி வந்த உடனே எனக்கு வணக்கம் சொல்லுவாய், இன்று ஏன் பேசாமல் இருக்கிறாய்? என் மேல் ஏதாவது கோபமா? நான் திரும்பி செல்கிறேன்” என்று சொன்னது.


“அடக்கடவுளே.. இப்போது நான் எதுவும் செய்யாமல் இருந்தால், எனக்கு உணவாக வேண்டிய அந்த நரி நிச்சயமாக தப்பித்து செல்லும். ஒருவேளை என்னை கண்டு பயந்து தான் இந்த குகை பேசாமல் இருக்கிறதோ” என்று எண்ணியது அந்த சிங்கம். உடனே  தன் கர்ஜிக்கும் குரலால் வணக்கம் சொல்லியது.


அதைக் கேட்ட உடன் நரி பயந்து ஓடியது. தன்னுடைய புத்திசாலித்தனத்தினால்  நரி தன்னுடைய உயிரைக் காப்பாற்றியது.


நீதி : சிந்தித்து செயல்பட வேண்டும்.


இன்றைய செய்திகள் - 10.10.2024


* குரூப்-4 தேர்வில் புதிதாக மேலும் 2,208 காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. இதனால், மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு.


* சீர்மிகு சிறப்பு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் சட்டக்கல்வி அளிக்கும் புதிய திட்டம் தொடக்கம்.


* ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ஏவுதளம் அமைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.


* வேதியியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் டேவிட் பேக்கர், இங்கிலாந்தின் டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு ‘புரத ஆராய்ச்சி’க்கான பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.


* டி20 கிரிக்கெட் தரவரிசை: ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஏற்றம் கண்ட இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா 3வது இடத்திற்கு முன்னேற்றம்.


* ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; அல்காரஸ், சின்னெர் காலிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* TNPSC notified that 2,208 new vacancies have been added in Group-IV examination.  Thus, the total number of posts has increased to 8,932.  Due to this, the cut off score is likely to decrease.


* In *Seermigu Sirappu* law college a new program is started to provide online legal education to the students  has been started.


 * ISRO chief Somnath said that the 3rd launch pad will be set up at Sriharikota.


* The Nobel Prize in Chemistry has been announced to 3 scientists, David Baker of America, Demis Hassabis of England and John Jumper for their work on 'Protein Research'.


 * T20 Cricket Rankings: India's Hardik Pandya climbs to 3rd spot in all-rounders list


* Shanghai Masters Tennis;  Algaras, Sinner advance to quarterfinals.


Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி