அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப் பதிவேடு & EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்கள் எண்ணிக்கை 100% சரியாக இருப்பதை உறுதி செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு
Director of Elementary Education ordered to ensure 100% correctness of number of students uploaded in attendance register & EMIS website in Government and Government aided schools
தொடக்கக் கல்வி இயக்குநர் இணைய வழி கூட்டம் 30.10.2024 அன்று மாவட்ட கல்வி அலுவலர், BEO (Nodal), DC -1 ஆகியோருக்கு நடத்தப்பட்டது.
1. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப் பதிவேட்டின் படி உள்ள மாணவர் எண்ணிக்கை & EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்கள் எண்ணிக்கை 100% சரியாக இருப்பதை CRC அளவில் உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளார்.
2. மேலும் மாணவர் எண்ணிக்கை வருகை பதிவேட்டிற்கும் & EMIS இணைய தளத்தில் உள்ள எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருப்பின் உடனடியாக சரி செய்து கொடுக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. பள்ளிகளில் கொடுக்கப்பட்டுள்ள Raise Request & Admission Approval - pending இருப்பின் ஆசிரியர் பயிற்றுநர்கள் DC மூலம் உடனடியாக சரி செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. மாணவர்கள் Long Absent எனில் வேறு பள்ளிகளில் சேர்ந்து இருப்பின் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மாணவனை Common Pool ற்கு அனுப்பிட வேண்டும்.
மேற்கண்ட பணிகளை 04.11.2024 (திங்கள்) அன்று மாலைக்குள் முடித்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்கள் குறுவளமையத்திற்குட்பட்ட பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை & EMIS இணைய தளத்தில் உள்ள மாணவர் எண்ணிக்கையும் சரியாக உள்ளதை குறுவளமைய அளவில் முகாம் நடத்தி சரிபார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆசிரியர் பயிற்றுநர்கள் மாணவர் வருகைப் பதிவேடு & பள்ளியின் EMIS இணைய தளத்தினை சரிபார்த்து 100% சரியாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களை களைவதற்காக இப்பணி மேற்கொள்ளப்படுவதால், மிகுந்த கவனத்துடன் செயல்பட ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வட்டார அளவில் எண்ணும் எழுத்தும் பயிற்சி இருப்பதால் இப்பணியினை அதற்கு தகுந்தாற்போல் திட்டமிட்டு நடத்திட வட்டார கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியின் மாணவர் விவரம் 100% EMIS இணைய தளத்தில் சரியாக உள்ளது என சான்றிதழ் அளிக்க வேண்டும்.
முதன்மைக் கல்வி அலுவலர்
கரூர்.
School EMIS Students Strength Format - Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி