தமிழகத்தில் பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள் நடத்த ரூ.12.5 கோடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2024

தமிழகத்தில் பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள் நடத்த ரூ.12.5 கோடி

நடப்பு நிதி ஆண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் விளையாட்டு போட்டிகள் நடத்த ரூ.12 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் எஸ்.மதுமதி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:


பள்ளிக்கல்வித் துறையின்கீழ் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளிலும் (அரசு, உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகள்) படிக்கும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் குறுவட்ட, கல்வி மாவட்ட, மண்டல, மாநில மற்றும் தேசிய அளவில் 38 மாவட்டங்களிலும் 25 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தவும், அனைத்து வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் செஸ் போட்டியை நடத்தவும் பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அனுமதி அளித்தும் இதற்காக ரூ.12 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

3 comments:

  1. எய் லூசு
    அந்த விளையாட்டு போட்டி நடத்துற தற்காலிக ஆசிரியர் முதலில் பணி நிரந்தரம் பண்ணுங்க....
    அப்புறம் நடத்தலாம்...
    எல்லாம் விளம்பரந்தா....

    ReplyDelete
  2. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உள்ள சிறப்பாசிரியர் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  3. 2026 தேர்தலில் திமுக படு தோல்வி அடைவதற்கு ஆசிரியரகளை நியமிக்காத பள்ளி கல்வி துறை அமைச்சரே காரணமாக அமைவார்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி