தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.
குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகிய துறைகளில் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 246 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஏதாவது செய்வீர்கள் என்று தான் வாக்களித்தோம். எதுவும் செய்ய முடியாது என்று கூறும் உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? பள்ளிகளில் தொகுப்பு ஊதியம் ஒழிக்கப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று கூறி பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்வது தேர்தல் அறிக்கை வாக்குறுதி. இன்னும் நிறைவேற வில்லை.
ReplyDeleteஆசிரியர் தேர்வு வாரியத்தின் உள்ள சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு எப்போதும் பணி நியமனம் செய்ய போவது இல்லையா?
ReplyDelete