தமிழ்நாடு அரசு உயர் கல்வித் துறை மாணவர்கள் நலனை முன்னிறுத்த வேண்டும்:பிரின்ஸ் கஜேந்திர பாபு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2024

தமிழ்நாடு அரசு உயர் கல்வித் துறை மாணவர்கள் நலனை முன்னிறுத்த வேண்டும்:பிரின்ஸ் கஜேந்திர பாபு

ஒரு கல்வி ஆண்டின் இடைப்பகுதியில் பேராசிரியர் பணி இட மாறுதல் என்பது கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டைப் பெரும் அளவில் பாதிக்கும். இத்தகைய நடவடிக்கை மாணவர்கள் நலனுக்கு எதிரானது.


நிரந்தர பணியில் பத்தாண்டுகளுக்கு மேலாக போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலை உள்ளது.


ஒன்று, இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே நிரந்த‌ர பணியில் இருக்கும் அரசு கல்லூரிகள் உள்ளன.  மற்ற ஆசிரியர்கள் கௌரவ விரிவுரையாளராகப் பணி புரிகின்றனர்.


இத்தகையக் கல்லூரிகளில் உள்ள ஒன்றிரண்டு ஆசிரியர்கள் கூட பணி மாறுதலில் வேறு கல்லூரிக்கு  சென்றுவிட்டால், அந்த இடத்தில் வேறு ஆசிரியர்கள் வருவதற்கு எந்த உத்தரவாதம் இல்லை. 


ஒரு கல்லூரியில் நிரந்தர பணியில் ஆசிரியர்களே இல்லாமல் எப்படி கல்வியியல், கல்வியியல் நிர்வாக செயல்பாடு நடக்கும்? 


சூழலை புரிந்துக் கொண்டு சில தியாகங்களைச் செய்ய ஆசிரியர் சமூகம் முன் வர வேண்டும்.


நிரந்தர பணியில் ஆசிரியர்களை நியமிக்க போர்க் கால அடிப்படையில் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.


கல்வி ஆண்டின் நடுவே அறிவிக்கப் பட்டிருக்கும் பணி மாறுதல் நடவடிக்கையை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.


அரசுக் கல்லூரியை நம்பி சேர்ந்துள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு  பணி மாறுதலை கல்வி ஆண்டின் இடைப்பகுதியில் நடத்தும் நடைமுறையை அரசு கைவிட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது. 


பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

பொதுச் செயலாளர்

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

15.11.2024.

1 comment:

  1. Privatatise the govt colleges is good most of the guest lecturers paying 20000-25000 thousand salary how can we expect good teaching. Nearly 10000 vacancy in higher education govt colleges. Now they called for 4000 vacancy filling, it could be planned to come under legal hurdles because govt not in a position pay huge salary simply eye wash on part of higher education.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி