"பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்" - அமைச்சர் உறுதி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2024

"பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்" - அமைச்சர் உறுதி!

 

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 3 ஆயிரத்து 192 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிகல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமாெழி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சங்கர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


அதனைத் தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறையின் 3 ஆண்டு செயல்பாடுகளை ஆய்வு செய்தார். குறிப்பாக தமிழ்புதல்வன், புதுமைப்பெண், அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பவும் அறிவுறுத்தியுள்ளார்.

4 comments:

  1. ஏதாவது செய்வீர்கள் என்று தான் வாக்களித்தோம். எதுவும் செய்ய முடியாது என்று கூறும் உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? பள்ளிகளில் தொகுப்பு ஊதியம் ஒழிக்கப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று கூறி பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்வது தேர்தல் அறிக்கை வாக்குறுதி. இன்னும் நிறைவேற வில்லை.

    ReplyDelete
  2. விரைவில்.... படிப்படியாக.... என்று கடந்த 10 ஆண்டு காலம் கேட்டுக் கேட்டு ஆசிரியர் வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் லட்சக்கணக்கானோரின் ஆசையில் மண்ணை அள்ளி போட்டு வருகிறீர்கள். தற்காலிக ஆசிரியர் வைத்து இளைஞர் வாழ்க்கை வீணடிக்கப் படுகிறது. இன்னும் மனமில்லை என்றால் நீங்கள் எதற்கு?

    ReplyDelete
  3. Special teachers PSTM posting pannunka

    ReplyDelete
  4. சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி