பணி நிரந்தரக் கோரிக்கை பரிசீலனை.. பகுதி நேர ஆசிரியர்கள் மகிழ்ச்சி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 18, 2024

பணி நிரந்தரக் கோரிக்கை பரிசீலனை.. பகுதி நேர ஆசிரியர்கள் மகிழ்ச்சி!

 தமிழக அரசுப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய பரிசீலிக்க நடவடிக்கையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வருக்கு பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை வைத்தார்.


இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, பரிசீலிக்க நடவடிக்கையில் உள்ளது என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக பணி நிரந்தரம் வலியுறுத்தி வருகின்ற பகுதி நேர ஆசிரியர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதி 181 ஐ நிறைவேற்றி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வார் என 12 ஆயிரம் குடும்பங்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.


தற்போதைய தொகுப்பூதியம் 12,500 ரூபாய் சம்பளத்தை கால முறை சம்பளமாக்க வேண்டும் என்பதே பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும். 13 ஆண்டுகளாக தற்காலிகமாக பகுதி நேர ஆசிரியர்களாக உடற்கல்வி பாடத்தில் 3700 பேர், ஓவியம் பாடத்தில் 3700 பேர், கணினி அறிவியல் பாடத்தில் 2 ஆயிரம் பேர், தையல் பாடத்தில் 1700 பேர், இசை பாடத்தில் 300 பேர், தோட்டக்கலை பாடத்தில் 20 பேர், கட்டிடக்கலை பாடத்தில் 60 பேர், வாழ்வியல் திறன் பாடத்தில் 200 பேர் என மொத்தம் பன்னிரண்டாயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.


10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2021ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததுமுதல் பணி நிரந்தரம் கேட்டு பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி அன்று 2,500 ரூபாய் சம்பள உயர்வு மற்றும் 10 லட்சம் மருத்துவ காப்பீடு என இரண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.


இதில் சம்பள உயர்வு இந்த 2024ஆம் ஆண்டு ஜனவரியில் வழங்கப்பட்டது. இதனால் 12,500 ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். மருத்துவ காப்பீடு அறிவிப்போடு உள்ளது. பல ஆண்டாக பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுபோன்ற சூழலில்தான் அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

5 comments:

  1. பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் நேர்க்காணல் மட்டுமே வைத்து இட ஒதுக்கீடு பின்பற்றாமல் அதிமுக நெருக்கமானவர்கள் மற்றும் பணம் கொடுத்து பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. ஆகவே நிரந்தரம் செய்ய தமிழக அரசு அனுமதிக்க கூடாது. தேர்வு தான் அனைவருக்கும் வைக்க வேண்டும்

    ReplyDelete
  2. நீங்கள் கூறுவது போல பலர் கூறி அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள பட்டது அதிமுக அரசின் காலத்தில் நீங்கள் கூறியது போல எதும் நடக்கவில்லை என நிருபிக்க பட்டது எனவே எங்களை பணி நிரந்தரம் செய்வது அரசின் கொள்கை முடிவு அதை அரசு முடிவு செய்யும் தேர்வு வைத்தாலும் அதில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மட்டும் தான் வைக்க வேண்டும் 12 ஆண்டுகள் கல்வி பணிக்காக எங்கள் வாழ்வை அர்பணித்து அதற்கான பலனை நாங்கள் கேட்கின்றோம் இதில் அனைவரும் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்க கூடாது.

    ReplyDelete
    Replies
    1. appadiyaanal TET etharku then appoint ku oru exam etharku... Ungaludaya appointmentlaye permanent ketpatharkana entha muganthiramum illai.. Neengal poratam nadathugirgal... part time endru thane sernthirgal... piragu etharku ungaluku matum nirantharam seiya vendum ... athuvum thervu ilamal apdiye vaithalum ungaluku mattum... ithu eppadi samooga neethi aagum... Antha appointment FC BC MBC SC ST nu category follow panala enbathu engal ellarukum therium...

      Delete
  3. Exam pass panni interview mudinchu PSTM posting kooda pannada avanka posting pannuvankala

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி