அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2024

அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்

வீரகனூர் அருகே அரசு உயர் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை கால் அழுத்தச் சொல்லி வகுப்பறையில் ஓய்வெடுக்கும் கணக்கு ஆசிரியரின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


சேலம் மாவட்டம் தலைவாசல் தாலூகாவிற்கு உள்பட்ட கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.


இந்த பள்ளியில் கிழக்கு ராஜாபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 90-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.


இதையும் படிக்க: 2025ஆம் ஆண்டு பொது விடுமுறை நாள்கள் அறிவிப்பு: பொங்கல், தீபாவளி எப்போது?


இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


இதனிடையே பள்ளியில் பணியாற்றி வரும் காமக்காபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணக்கு ஆசிரியர் ஜெயபிரகாஷ் குடிபோதையிலே பள்ளிக்கு வருவதோடு, மாணவர்களுக்கு முறையாக பாடம் எடுக்காமல் வகுப்பறையிலே குடிபோதையில் தூங்குவதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில் அங்கு பயிலும் மாணவர்களை கால் அழுத்தச் சொல்லி ஒய்வேடுக்கும் விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சேலம் மாவட்டம், கிழக்கு ராஜபாளையம் அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொன்ன ஆசிரியர் சஸ்பெண்ட் கணித ஆசிரியர் ஜெயபிரகாஷை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட முதன்மை 


 கல்வி அலுவலர் கபீர் அதிரடி உத்தரவு


மாணவர்களை கால் அழுத்த சொல்லி, ஆசிரியர் தூங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. இது போன்ற ஆசிரியரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்

    ReplyDelete
  2. ஆசிரியர்களுக்கு அவ பெயரை உண்டாக்கும் இதுபோன்ற நாயை டிஸ்மிஸ் பண்ணனும்.

    ReplyDelete
  3. Intha arasukku ithu ponta teachers romba thevai...
    Permanent teachers appoint pannunna ketkkruya...

    ReplyDelete
  4. oh intha onion than athiradi nadavadikaiya...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி