அனுமதி பெற்றுதான் இனி ஆசிரியர்கள் எந்தவொரு விடுப்பும் எடுக்க வேண்டும் - ஆணையர் சுற்றறிக்கை : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2024

அனுமதி பெற்றுதான் இனி ஆசிரியர்கள் எந்தவொரு விடுப்பும் எடுக்க வேண்டும் - ஆணையர் சுற்றறிக்கை :

அனைத்துப்  பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ( பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தவிர ) விடுப்புக் கோருதலுக்கான " CCMC ALL SCHOOLS TEACHERS வாட்ஸ் ஆப் " ( Whatsapp ) குழுவில் சிறுவிடுப்புகள் ( தற்செயல் விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட விடுப்பு ) ஆகியவற்றை முன்னதாக தெரிவித்து , ஆணையர் அவர்களால் விடுப்பு அனுமதிக்கப்பட்ட பின்னரே விடுப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் , இதர விடுப்புகள் ( மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு ) ஆணையர் அவர்களிடம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களே நேரடியாக அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 மேற்குறிப்பிட்ட வாட்ஸ் ஆப் ( Whatsapp ) குழுவில் தமது பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ( பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தவிர ) இணைக்கப்பட்டுள்ளதை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும். 


இந்த சுற்றறிக்கையினை பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் சுற்றுக்கு விட்டு கோப்பில் பராமரிக்க தெரிவிக்கப்படுகிறது.

👇👇👇👇

மாநகராட்சி கல்வி அலுவலகம் - கோயம்புத்தூர் 



1 comment:

  1. அரசு பள்ளிகள் ஆசிரியர்களை கட்டுபாடுத்த மட்டுமே நடத்தப்படுகிறதா? கட்டுபாடுகள் அரசு பள்ளி ஆசியர்களுக்கு மட்டுமா இல்லை மாணவர்கள் நல்ஒழுக்கத்தில் வழிநடத்துவதற்காகவா? மாணவர்களின் கட்டுபாட்டு சட்டங்கள் எங்கே?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி