சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியம், துவரலகண்மாய் ஆர்.சி., நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ், 2022ல் இறந்ததால் ஏற்பட்ட காலி இடத்துக்கு, அப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய ஆரோக்கியசாமி பதவி உயர்த்தப்பட்டார்.
இது சார்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ் பிறப்பித்துள்ள உத்தரவு:
பொதுவாக, சிறுபான்மை பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் நியமனங்களுக்கும், பதவி உயர்வுகளுக்கும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.
மேலும், சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு குறித்து, மதுரை கிளை வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. அதில் இறுதி தீர்ப்பை பெற்ற பின், இவ்விவகாரத்தில் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கட்டாயம் என்று சொல்லிவிட்டால் கட்டாயம் ஆகிவிடாது. பொறுத்திருந்து பார்ப்போம்.
ReplyDeleteசட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்..... சிறுபான்மை யினருக்கு ஒரு சட்டம் இந்துக்களுக்கு ஒரு சட்டமமா..... தகுதி தேர்வு அனைவரும் எழுத வேண்டும்
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம் வருகின்ற ஜனவரி மாதம் ஒரு மிகப்பெரிய தீர்ப்பு கல்வித்துறையில் வரப்போகிறது அதன் பிறகு அரசு தொடக்கப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய அனைத்து பள்ளிகளிலும் பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் அனைத்திற்குமே ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்ற தீர்ப்பு உறுதியாக வரப்போகிறது ஆகவே தேவையின்றி யாரும் குழப்பம் அடைய வேண்டாம்
ReplyDeleteபதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுதல் கட்டாயம் என்ற தீர்ப்பு வர வேண்டும்.....
ReplyDeleteஇந்த அரசு வந்து கல்விதுறையில் ஏகப்பட்ட குழப்பம் படித்தவர்களை மதிப்பதில்லை பணி நியமனம் செய்வதில்லை எதற்கு இவர்களுக்கு அடுத்த முறை இவர்களை ஓட்டு போட வேண்டும்
ReplyDeleteTET Condition is for classes upto 8th std then what about the Higher classes 10th, 11th & 12th there is no mandatory exam like PG-TRB for minority schools they can recruit their choice of candidates like the relatives of Rev. Father's and Sisters etc...
ReplyDeleteமிகவும் வருந்தத்தக்க உண்மை. சிறுபான்மை பள்ளிகளுக்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் பெரும் பங்கு தகுதியற்ற உறவினர்களே. இதனால் தகுதி உள்ள பலர் பாதிக்கப்படுகின்றனர். அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் வேண்டும் ஆனால் தகுதி தேர்வு வேண்டாம்
Deleteவாய்ப்பு கிடைக்காத வரை அனைவரும் உத்தமர்களே
Delete