பாரத எழுத்தறிவு திட்டத்திற்கு ஆட்களை தேர்வு செய்ய கட்டாயப்படுத்துவதாக பள்ளி ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
அடிப்படை எழுத்தறிவை பயிற்றுவிக்க நாடு முழுவதும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022 ல் அறிமுகபடுத்தப்பட்டது. 2027க்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம், தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு 2 ஆண்டுகளில் அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மீண்டும் இத்திட்டம் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டு கணக்கெடுக்கும் பணிக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்களை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான நகரங்களில் படித்தவர்களே அதிகம் உள்ளனர். கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் ஏற்கனவே இத்திட்டத்தில் பலர் பயனடைந்துள்ளனர். இதனால் எழுத்தறிவு பெறாத முதியவர்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். இந்நிலையில் வட்டார வள மையங்கள் சார்பில் எழுத்தறிவு திட்டத்திற்கு ஆட்களை பிடித்து தரும்படி ஆசிரியர்களை கட்டாயப்படுத்துவதாக ஆசிரியர்கள் புகார் எழுப்பி வருகின்றனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது: பள்ளிகளில், கற்பித்தல் மட்டுமின்றி ஆசிரியர்களுக்கு பல்வேறு பணிகள் வழங்கப்படுகின்றன. நகர் பகுதிகளில் பெரும்பாலானோர் படித்தவர்களே உள்ளனர்.
சுற்றியுள்ள கிராம பகுதிகளில் எழுத்தறிவு திட்டத்திற்கு ஏற்கனவே பலரை கண்டறிந்து அவர்கள் குறித்து வட்டார வள மையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மீண்டும் ஆட்களை கண்டறிந்து தர கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் ஆசிரியர்களின் பணி பாதிக்கப்படுகிறது என்றனர்.
Dmk waste New posting panna maatanka
ReplyDelete