IFHRMS 2.0 - ஜனவரி 2025 முதல் அமல் - களஞ்சியம் ஆப்பில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் என்னென்ன? ஆணையர் விளக்க கடிதம்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2024

IFHRMS 2.0 - ஜனவரி 2025 முதல் அமல் - களஞ்சியம் ஆப்பில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் என்னென்ன? ஆணையர் விளக்க கடிதம்!!!

 

ஆணையர் , கருவூலம் மற்றும் கணக்குத்துறை அவர்களின் அறிவுறுத்தலின்படி , அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் பயன்பாட்டிற்கான களஞ்சியம் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . களஞ்சியம் கைப்பேசி செயலி 01 01 2025 முதல் முழுமையான பயன்பாட்டிற்கு வர இருப்பதனை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது . இச்செயலி மூலம் . அரசு ஊழியர்கள் தங்களின் Pay Slip , Pay Drawn Particulars முதலிய அறிக்கைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . மேலும் விடுப்புகள் ( தற்செயல் விடுப்பு ஈட்டிய விடுப்பு முதலியவைகளும் ) , பண்டிகை முன்பணம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி முன்பணம் ஆகியவற்றையும் இச்செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும் பண்டிகை முன்பணம் மற்றும் ஈட்டிய விடுப்பு தொடர்பான செயல்முறை ஆணைகளும் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . பொது வருங்கால வைப்பு நிதி ( CIW மற்றும் பங்களிப்பு ஓய்வுதிய திட்டம் CPS க்கான மீதத்தொகையை சரிப்பார்த்துக் கொள்ளலாம் . ஓய்வூதியர்கள் தங்களின் வருடாந்திர நேர்காணலை இச்செயலி மூலம் செய்யலாம் . மேலும் Pension Slipy , Pension Drawn Particulars Form 16 ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . மேலும் களஞ்சியம் கைப்பேசி யெலியை Google Play Store po ம் பதிவிறக்கம் செய்யலாம் . இச்செயலி சம்பந்தமான சந்தேகங்களை அறிய சம்பளக் கணக்கு அலுவலகம் ( வடக்கு ) , சென்னை -0 யை தொடர்பு கொள்ளலாம் . இப்பொருள் தொடர்பான சுற்றறிக்கை வற்கனவே அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி