ஜன.,22ம் தேதி முதல் 25ம் தேதி வரை வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் நிகழ்வை பொதுமக்கள் பார்வையிட பல்வேறு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
கோள்கள் வானில் ஒரே வரிசையில் தோன்றுவது சிறப்பு இல்லை என்றாலும், அவற்றில் பலவற்றை ஒரே நேரத்தில் பார்ப்பது அரிது. அத்தகைய ஓர் அரிய நிகழ்வு நடக்க உள்ளது. ஜன.,22ம் தேதி முதல் 25ம் தேதி வரை வானியல் ஆர்வலர்களை மகிழ்விக்கும் வகையில், ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்க உள்ளன. *வெறும் கண்களால் வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்வாய் ஆகியவற்றை பார்க்க முடியும்.* ஆனால் நெப்டியூன் மற்றும் யுரேனஸை சக்திவாய்ந்த தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும்.
ஜன. 22ம் தேதி முதல் ஜன., 25ம் தேதி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், பொதுமக்கள் பார்வையிட தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஏற்பாடு செய்துள்ளது. கோவையில் மண்டல அறிவியல் மையத்திலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து, வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது: பொதுமக்களுக்கான சிறப்பு இரவு வான கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. *வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்வாய் கிரகங்களை உங்கள் மொட்டை மாடியில் இருந்தோ அல்லது கடற்கரையில் இருந்தோ பார்க்கலாம்.*
செவ்வாய் கிரகம் இரவு 9 மணியளவில் உதயமாகும். இந்தக் கிரகங்கள் அனைத்தையும் தனித்தனியாகப் பார்க்கலாம். கோள்கள் ஒன்றுக்கொன்று மில்லியன் கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன. யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றை ஒரு பெரிய தொலைநோக்கி மூலம் பார்க்க முடியும் என்றாலும், நட்சத்திரங்களுக்கு மத்தியில் அவற்றைக் கண்டறிய நிபுணத்துவம் தேவை. இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடக்காது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கோவை கொடிசியா ரோட்டிலுள்ள அறிவியல் தொழில்நுட்ப மண்டல அறிவியல் மையத்தில் கோள்களின் அணிவகுப்பை ஜன., 22ம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 8.00 மணி வரை கண்டு ரசிக்கலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி