வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் 60,000 கணினி பட்டதாரிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2025

வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் 60,000 கணினி பட்டதாரிகள்

தமிழகத்தில் கணினி அறிவியல் படிப்புடன் பி.எட்., படித்த, 60,000 பட்டதாரிகள் அரசு பணி வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கின்றனர். தகுதி இருந்தும் அரசு பள்ளிகளில் தற்காலிகமாக நியமிக்கப்படும் கணினி பயிற்றுனர் பணியிடங்களிலும், இவர்களுக்கான நியமனங்கள் மறுக்கப்படுகிறது என்ற புகார் எழுந்துள்ளது.


மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகளில், பி.எஸ்சி., - எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புடன் பி.எட்., பட்டம் பெற்று, 60,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். பிற பாடங்களுக்கு உள்ளது போல, கணினி ஆசிரியர் நியமனத்திற்கு பி.எட்., கட்டாயம் இல்லை என்ற நிலை உள்ளதால், பி.எட்., தகுதியால் பயனில்லை. இதனால், பகுதி நேர ஆசிரியர்கள் நியமனத்திலும், பி.எட்., பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டனர்.


 இதுபோல் பிற பாடங்களுடன் பி.எட்., தகுதி பெற்றவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் வட்டார கல்வி அலுவலர் (பி.இ.ஓ.,), மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க தகுதி உள்ளது. ஆனால், கணினி அறிவியலுடன் பி.எட்., படித்தவர்களுக்கு இவ்வகை போட்டித் தேர்வுகளில் பங்கேற்க அனுமதியில்லை. அரசு பள்ளிகளில் கணினி பயிற்றுனர், ஆய்வக கணினி பயிற்றுனர், எமிஸ் பணிக்கான பணியிடங்களில் மட்டுமே நியமிக்க தகுதி உள்ளது.

1 comment:

  1. அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் சில்லறை தனமாய் சுயநலம் கொண்டு எப்படியும் நிரந்தர பணி கிடைக்கும் என தற்காலிகமாக வேலைக்கு செல்லும் தற்குறிகள் இருக்கும் வரை நிரந்தர பணி என்பது முற்றிலும் கிடைக்காது, முதுகலை மற்றும் பி.எட் படிப்பை வைத்துக்கொண்டு ஏன் ஒரு தனியார் பள்ளியில் மாதம் 20000 ரூபாய் சம்பளத்துக்கு செல்ல கூடாது , அனைவரும் ஒற்றுமையாய் இருந்தால் அரசு கண்டிப்பாய் நிரந்தர வேலை கொடுக்க வேண்டும்,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி