"பள்ளிக்கல்வித்துறை சாதனைகளால் மகிழ்கிறேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2025

"பள்ளிக்கல்வித்துறை சாதனைகளால் மகிழ்கிறேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு.

தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணியைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தேன் . அந்தப் பணி , இன்று சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசுப் பள்ளியில் நிறைவுபெற்றிருப்பதைத் தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தார்.

 நவீனமயமான தொடக்கப் பள்ளிகள் , நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் இடம்பெற உதவும் மாதிரிப் பள்ளிகள் எனப் பள்ளிக்கல்வித் துறை படைத்து வரும் சாதனைகளால் மகிழ்கிறேன் ! அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என உரக்கச் சொல்வோம்.




3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி