பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த தொகுப்பூதிய பணியாளர்களுக்கு விருப்பமாறுதல், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் செய்திட கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2025

பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த தொகுப்பூதிய பணியாளர்களுக்கு விருப்பமாறுதல், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் செய்திட கோரிக்கை

 

பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த தொகுப்பூதிய பணியாளர்களுக்கு விருப்பமாறுதல், ஊதிய உயர்வு,  பணி நிரந்தரம் செய்திட  கோரிக்கை


கோரிக்கை : 1


பள்ளிக் கல்வி துறை தமிழ் நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தொகுப்பூதிய பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான விருப்ப பணி மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என கடந்த 20.10.2024 அன்று திருச்சியில்   அறிவித்தார்  மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் ஆனால் மூன்று மாதம் காலங்கள் கடந்தும் இதுவரை கலந்தாய்வு நடத்தப்படவில்லை எனவே தொகுப்பூதிய பணியாளர்களுக்கு உடனடியாக விருப்ப பணி மாறுதல் கலந்தாய்வு  நடத்திட வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.


கோரிக்கை :2


 தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊதிய உயர்வு இந்தாண்டு வழங்கப்படாமல் உள்ளது ஒன்றிய அரசு நிதி வழங்கினால் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும்  தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு அரசு தனது நிதியிலிருந்து இந்த ஆண்டு தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில் கோரிக்கை வைகிறோம்


கோரிக்கை - 3


பள்ளி கல்விதுறையில் 1500 முழுநேர தொகுப்பூதிய பணியாளர்கள் 10 முதல் 20 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் தொகுப்பூதிய பணியாளர்களை காலமுறை பணி நிரந்தரம் செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆவணம் செய்ய வேண்டும்.


ராஜ்குமார் கடலூர்

செயலாளர் 

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - 34/2020

கடலூர் மாவட்டம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி