நூறு ஆண்டுகளைக் கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா கொண்டாடுதல் - Director Proceedings - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2025

நூறு ஆண்டுகளைக் கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா கொண்டாடுதல் - Director Proceedings

கல்வியின் வாயிலாக அனைவருக்குமான சமூகநீதியை உறுதி செய்வதில் அரசுப் பள்ளிகளுக்கு பெரும் பங்குண்டு . எளிய மனிதர்களுக்கான கல்விக் கனவை நிறைவேற்றும் பொறுப்பில் அரசுப் பள்ளிகள் என்றுமே முன்னிற்கின்றன . நம் அரசுப் பள்ளிகள் கோடிக்கணக்கான மாணவர்களுக்கு கலங்கரை விளக்கமாக வழிகாட்டி , தம் விழுதுகளை உலகம் முழுவதும் வேரூன்றி , பல சிறந்த மனிதர்களை உருவாக்கிய வரலாற்றுப் பெருமைக்குரியது.


 தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 2238 பள்ளிகள் நூறு ஆண்டுகளைக் கடந்து இன்றும் நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறது . இத்தகையப் பெருமைக்குரிய நம் அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுக் கடந்த வரலாற்றைக் கொண்டாடுவதன் வாயிலாக அரசுப் பள்ளிகளின் மீது பெற்றோர்களுக்கும் பொது மக்களுக்கும் மிகுந்த நம்பிக்கையும் , அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உத்வேகமும் , ஆசிரியர்களுக்கு உந்துதலாகவும் அமையும் . இவ்விழா அரசுப் பள்ளிகளின் வரலாற்று பதிவாகவும் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு , பராமரிப்பு போன்ற பள்ளியின் தேவைகளை சமூகப் பங்கேற்போடு உறுதிசெய்யவும் வாய்ப்பாக அமையும் அப்பள்ளிகளை கொண்டாடும் விதமாக " கலைஞர் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் , நூறாண்டுகள் கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா மாநில அளவில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் தொடங்கி வைத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.


 அதனைத் தொடர்ந்து , ஜனவரி 23 ம் தேதி முதல் மாவட்ட அளவிலான நூற்றாண்டுத் திருவிழா ஒரு பள்ளியில் தொடங்கப்பட்டு , அம்மாவட்டதிலுள்ள அனைத்து நூறாண்டுகள் கடந்த அரசுப் பள்ளிகளிலும் பள்ளி அளவிலான நூற்றாண்டுத் திருவிழா கொண்டாடப் பரிந்துரைக்கப்படுகிறது.

 எனவே , நூற்றாண்டுத் திருவிழாவை அனைத்து நூற்றாண்டுப் பள்ளிகளிலும் பள்ளியின் ஆண்டு விழாவோடு இணைத்து கொண்டாடிட அனைத்து நூறாண்டுகள் கடந்த அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி