TNPSC - குரூப் 4 காலிப்பணியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2025

TNPSC - குரூப் 4 காலிப்பணியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு

*குரூப் 4 தேர்வுக்கு கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


*இதன்மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்டுள்ளது.


*டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஏற்கெனவே 3 முறை காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 41 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.


*தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பட்டு வருகின்றன.


*இதில், டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு 6,244 காலிப்பணியிடங்களுக்கு வெளியானது. அதில் செப்டம்பர் மாதம் 480, அக்டோபர் மாதம் 2,208 மற்றும் 559 என இரண்டு முறை அதிகரிக்கப்பட்டு, ஏற்கனவே 9,491 காலிப்பணியிடங்களுக்கு முடிவுகள் அக்டோபர் 28 ஆம் தேதி வெளியானது.


*இந்நிலையில், தற்போது மேலும் கூடுதலாக 41 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதனால், மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக அதிகரித்துள்ளது.

1 comment:

  1. தேர்வு முடிவு வெளிவந்த பிறகு பணியிடங்களை அதிகரிக்க கூடாது. உச்ச நீதிமன்றம் கருத்து.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி