தொலைதூரக் கல்வியில் சேர பிப்.15 வரை அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2025

தொலைதூரக் கல்வியில் சேர பிப்.15 வரை அவகாசம்

 

தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக இக்னோ அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ, தொலைதூரக்கல்வி திட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடங்களில் சான்றிதழ், டிப்ளமா, இளங்கலை, முதுகலை படிப்புகளை வழங்கி வருகிறது. 2025-ம் ஆண்டு ஜனவரி பருவ சேர்க்கைக்கான கடைசி தேதி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 15 வரை ஆன்லைனில் (https://ignouadmission.samarth.edu.in) விண்ணப்பிக்கலாம்.


சேர்க்கை உறுதி செய்யப்பட்ட பிறகு தகுதியான மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு ஆன்லைனில் (www.scholarships.gov.in/) விண்ணப்பித்துக்கொள்ளலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை (www.ignou.ac.in) பார்க்கலாம். மேலும், சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி