2024-25 - ஆம் ஆண்டில் , பார்வையில் காணும் செயல்முறைகளின் படி நவம்பர் . டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான சிறார் திரைப்படங்கள் 6 முதல் 9 - ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திரையிடப்பட்டுள்ன.
அதனை தொடர்ந்து சிறார் திரைப்படம் திரையிடல் சார்ந்த பள்ளி , வட்டாரம் , மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது . அதன் பொருட்டு , அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 - ம் வகுப்பு முதல் 9 - ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் பங்கு பெறும் வகையில் எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல் . பள்ளி அளவிலான போட்டிகளை அட்டவணை -1 ல் குறிப்பிட்டுள்ளவாறு திட்டமிட்டு நடத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்திடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் தெரிவிக்கப்படும்.
வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தும் போது , இதில் சிறந்து விளங்கும் அனுபவம் வாய்ந்த நடுவர்களை தேர்ந்தெடுத்து உரிய முறையில் போட்டிகளை நடத்துதல் வேண்டும் . மேலும் , பள்ளி , வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு திட்டமிட்டு நடத்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நிலையிலான போட்டிகளை நடத்தும் போதும் , போட்டிகள் குறித்த விவரத்தினை போட்டி நடக்கும் தேதிக்கு முந்தைய தினத்தன்று மட்டுமே மாணவர்களுக்கு தெரிவித்தல் வேண்டும். எக்காரணம் கொண்டும் முன்னதாக தெரிவித்தல் கூடாது
movie screening Competition reg - Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி