3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஸ்லாஸ்’ தேர்வு நாளை தொடக்கம்: கூடுதல் வழிகாட்டுதல்கள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2025

3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஸ்லாஸ்’ தேர்வு நாளை தொடக்கம்: கூடுதல் வழிகாட்டுதல்கள் வெளியீடு

 

அரசுப் பள்ளி​களில் 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்​களுக்கான ‘ஸ்லாஸ்’ தேர்வு நாளை (4-ம் தேதி) தொடங்​கு​கிறது. இத்தேர்​வுக்கான கூடுதல் வழிகாட்டு​தல்களை பள்ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டுள்​ளது.


இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி​களுக்கு பள்ளிக்​கல்வி இயக்​குநரகம் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: தமிழகத்​தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி​களில் பயிலும் மாணவர்​களின் கற்றல் திறனை அளவிட ‘ஸ்லாஸ்’ எனும் மாநில கற்றல் அடைவு தேர்வு அவ்வப்​போது நடத்​தப்​படு​கிறது. அதன்​படி, இந்த ஆண்டு 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் 15.78 லட்சம் மாணவர்​களுக்கு பிப்​ரவரி 4 முதல் 6-ம் தேதிவரை ஸ்லாஸ் தேர்வு நடத்​தப்படஉள்ளது. கொள்​குறி வினாத்​தாள் அடிப்​படை​யில் தேர்வு நடைபெறும். 3-ம் வகுப்​புக்கு 35 கேள்வி​கள், 5-ம் வகுப்​புக்கு 45 கேள்விகள், 8-ம் வகுப்​புக்கு 50 கேள்விகள் இடம்​பெறும்.


இந்த தேர்​வுக்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்​கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கூடுதல் வழிகாட்டு​தல்கள் வெளி​யிடப்​பட்​டுள்ளன. அதன்​படி, தேர்​வுக்கு முந்தைய நாள் வட்டார வள மையத்​தில் இருந்து வினாத்​தாள்களை பெற்று பள்ளி​களுக்கு எடுத்​துச் செல்ல வேண்​டும். ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்த பிறகு, வினாத்​தாள்​கள், ஓஎம்ஆர் விடைத்​தாள்களை பெற்று வட்டார வள மையத்​தில் ஒப்படைக்க வேண்​டும். இவ்​வாறு அ​தில் கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி