கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான செட் தகுதித் தேர்வு மார்ச் 6-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 2024-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான தகுதித் தேர்வுக்கு (செட்) திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டன. இந்நிலையில், செட் தகுதித்தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட வேண்டும் என்று உயர்கல்வித் துறை கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி அரசாணை வெளியிட்டது.
அதன்படி, யுஜிசி வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி செட் தகுதித் தேர்வு மார்ச் 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் கணினிவழியில் நடைபெறும். இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஹால்டிக்கெட் விண்ணப்பதாரர்களுக்கு தனியாக அனுப்பப்படபடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
SAI 10th social public exam important Qustion 2025
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2025/02/10-th-social-public-exam-important.html