போராட்டாம் வேண்டாம் - சங்க நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழு நாளை பேச்சுவார்த்தை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2025

போராட்டாம் வேண்டாம் - சங்க நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழு நாளை பேச்சுவார்த்தை!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கயல்விழி ஆகியோர் இக்குழுவில் உள்ளனர்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது

 பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு தமிழக முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்து ஆணையிட்டுள்ளார்.


இந்தக் குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நாளை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

5 comments:

  1. 2020 பிறகு படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் தாருங்கள்

    ReplyDelete
  2. Special teachers Physical education PSTM

    ReplyDelete
  3. நாளை பெட்டி கைமாறும்,போராட்டம் கைவிடப்படும் நன்றி சங்க நிர்வாகிகளுக்கு ,வாழ்க தமிழ்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி