சி.இ.ஓ. , வுக்கு கோர்ட் தண்டனை - அவதுாறு வழக்குகளை விரைவாக முடிக்க கல்வித்துறை தீவிரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2025

சி.இ.ஓ. , வுக்கு கோர்ட் தண்டனை - அவதுாறு வழக்குகளை விரைவாக முடிக்க கல்வித்துறை தீவிரம்

அவதுாறு வழக்கு ஒன்றில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சி.இ.ஓ., ஒருவருக்கு சிறை தண்டனை, அபராதம் விதித்த நடவடிக்கையை அடுத்து, மாநில அளவில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


அரசு மற்றும் அரசு உதவி பெறும், சிறுபான்மை பள்ளிகளில் பணி நியமனங்கள் அனுமதி, பதவி உயர்வு இழுத்தடிப்பு, சம்பள நிர்ணயம், ஊக்கத்தொகை உட்பட பண பலன்கள் தொடர்பாக மாநில அளவில் 8,000க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.


இதில், பெரும்பான்மையான வழக்குகள் உதவி பெறும், சிறுபான்மை பள்ளிகளுக்கு உட்பட்டவை.


ஆசிரியர், அலுவலர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் அதிகாரிகள் அளவிலேயே பேசி முடிக்க வேண்டிய நிலையில் இருந்தாலும், இழுத்தடிப்பு காரணமாக நீதிமன்றங்களில் வழக்குகளாக மாறுகின்றன.


அங்கு பிறப்பிக்கப்படும் உத்தரவுகளையும், உரிய முறையில் அதிகாரிகள் பின்பற்றி வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர தவறுவதால், அவதுாறு வழக்குகளை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.


இதன் தொடர்ச்சியாக, முதன்முறையாக முதன்மை கல்வி அலுவலர் ஒருவருக்கு சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது, அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


இதனால், அவதுாறு வழக்குகள் குறித்த விபரங்களை பட்டியலிட்டு, அவற்றின் நிலவரம் குறித்து ஆய்வு செய்ய சென்னை, மதுரை சட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:


உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம், பதவி உயர்வு, பணப்பலன்கள் தொடர்பான அவதுாறு வழக்குகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு வரை கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.


அதுதொடர்பாகவும், அரசு கொள்கை முடிவுப்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரைவுபடுத்த அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.

4 comments:

  1. இனி எல்லா அதிகாரிகளுக்கும் இதுதான் கதி,நீதித்துறைக்கு பணிவான வணக்கம்

    ReplyDelete
  2. The court give more verdict like this in contempt of court. If you file RTI at joint secretary level most of the RTI resolved in information commission. Even information commission for complaint in 18(1) enquired in 19(3) even these people not giving correct answers. For these type of people court has done right. In some more cases they have to give some verdict like this.

    ReplyDelete
  3. நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத மற்றும் நடைமுறைக்கு கொண்டு வராத உயர் அதிகாரிகள் அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும் அல்லது அவர்களது ஊதியத்தை நிறுத்தி வைக்க வேண்டும் அப்பொழுதுதான் நீதிமன்றம் மீதான மக்களிடம் நல்ல மதிப்பு கிடைக்கும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி