தற்செயல் விடுப்பு எடுத்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 1.05 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய நிதித்துறை அனுமதி கேட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; சரண் விடுப்பு சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. நான்கு ஆண்டுகளாக இதை அரசு கண்டுகொள்ளவில்லை. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
பிப்.25ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில், மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அன்று 1.05 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் தற்செயல் விடுப்பு எடுத்து,போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு சட்ட விதிகளின்படி முன் அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்தவர்களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய நிதித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
சுடலை will close 2026
ReplyDeleteஎங்களுக்காகவும் வருங்கால சந்ததிகளுக்காகவும்(படித்து இனி அரசு வேலைக்கு வரப்போகிற)ஒரு நாள் சம்பளம் இழப்பதில் எந்த வருத்தமும் இல்லை.
ReplyDeleteமுதலமைச்சர் யோக்கியனாக இருந்திருந்தால் இந்த போராட்டம் தேவையில்லை. அயோக்கியர்களான இவர்களுக்கு ஆகும் சுய விளம்பர செலவை மிச்சப்படுத்தினால் வருடத்திற்கு 10 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கலாம்
ReplyDelete