CPS ₹50,000/-ஐ 80CCD(1B)ல் கழிக்கக் கூடாது. . . செல்வ.ரஞ்சித் குமார்_ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2025

CPS ₹50,000/-ஐ 80CCD(1B)ல் கழிக்கக் கூடாது. . . செல்வ.ரஞ்சித் குமார்_

 

CPS ₹50,000/-ஐ 80CCD(1B)ல் கழிக்கக் கூடாது. . . கழிக்கக் கூடாது. . . . கழிக்கவே கூடாது!


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


2017 முதல் கடந்த காலங்களில் வருமான வரித்துறையில் இருந்து பெறப்பட்ட விளக்கக் கடிதங்களில் CPS தொகையை கழிக்கலாம் என்றால் அது Tire-I முதலீடாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற முக்கியக் குறிப்பும் சேர்த்தே தான் இடம்பெற்றிருக்கும் என்பதைத் தற்போதும் 50,000 கழிப்போம் என்று கூறும் CPS பாதிப்பாளர்கள் கவனத்தில் கொள்ளவும்.


IT துறை தொழிற்நுட்ப ரீதியாக உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் NPSல் சேராத - Tire-Iல் முதலீடு செய்யப்படாத CPS தொகையை விதியை மீறிக் கழிப்போம் என்பது தேவையற்ற சிக்கல்களை CPS பாதிப்பாளருக்கும், அதனை ஏற்கும் ஊதியம் வழங்கும் அலுவலருக்கும் ஏற்படுத்தக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.


அனைத்திற்கும் மேலாக, இம்முறை நமது வரியை நிர்ணயம் செய்வதே IFHRMS தான் என்பதால், 80CCD(1B)ஐ நமக்கு வழங்கலாமா கூடாதா என்பதையும் IFHRMS தான் முடிவு செய்யும்.


நானறிந்தவரை IFHRMS 80CCD(1B)ஐ பயன்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை.

2 comments:

  1. 20 ஆண்டுகளாக இதைத்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கென்ன பிரச்சினை. இது வரை IT துறை
    எந்த விளக்கம் தர வில்லை.

    ReplyDelete
  2. IFHHRMS ல் பதிவேற்றம் பலர் செய்திருக்கிறார்கள். Reject செய்யப்படவில்லை. அடுத்தாண்டிற்கு அதற்கான தேவையே இருக்காது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி