மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தும் 12 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2025

மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தும் 12 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லை.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் வெளியிட்டு வரும் நிலையில், 11,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருந்தும், 12 ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமனம் இல்லாதது தொடக்கக் கல்வியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில், மார்ச் 1 முதல், 37,553 அரசு பள்ளிகளில் துவங்கிய மாணவர் சேர்க்கை எதிரொலியாக, 1 லட்சத்து 6,268 மாணவர்கள் புதிதாக சேர்க்கையானதாக கல்வித்துறை தெரிவித்து உள்ளது.



மெத்தனம்


வரும் கல்வியாண்டில், ஐந்து லட்சம் மாணவர்களை சேர்க்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு வழங்கும் நலத்திட்டங்கள் அடிப்படையில், பொதுவாகவே கடந்த ஆண்டுகளில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.


ஆனால், அதேநேரம் ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


அதாவது, தொடக்கக்கல்வித் துறையில் ஒரு லட்சத்து, 12,000 ஆசிரியர்கள் நியமிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது, 93,000 ஆசிரியர்களே பணியில் உள்ளனர். 11,000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.


இத்துறையில், 2012க்குப் பின் இதுவரை இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.


ஆண்டுதோறும், 5,000 பேர் ஓய்வு பெறுகின்றனர். மாணவர்கள் சேர்க்கையை வெளிப்படையாக கொண்டாடும் அரசு, அதற்கேற்ப ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்காதது ஏன்? இதனால், கல்வித்தரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.


இதுகுறித்து அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:


ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும், அரசு செலவினத்தை கணக்கில் கொள்கிறது. ஆசிரியர்களுக்கான சம்பளத்தை மாணவர்களுக்கான முன்னேற்றத்திற்கான செலவாகவே பார்க்க வேண்டும். அது, நாட்டின் அறிவுசார் முதலீடாகும்.



மடை மாற்றுகின்றனர்


ஆனால், தற்போதைய அதிகாரிகள் இத்துறைக்கு ஒதுக்கப்படும் பெரும்பாலான நிதியை திட்டப் பணிகளுக்கு மடைமாற்றி விடுகின்றனர்.


இதனால், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆசிரியர் பணிக்காக காத்திருந்தாலும், அவர்களை நியமிப்பதில் அரசு ஆர்வம் காட்டவில்லை.


அதேநேரம், பல்வேறு திட்டங்கள் மூலம் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமித்து வருகின்றனர். அரசின் அலட்சியப் போக்கால் லட்சக்கணக்கில் மாணவர்களை சேர்த்தாலும், அரசு பள்ளிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி விடும்.


இவ்வாறு கூறினர்.

6 comments:

  1. Special teachers PSTM physical education posting podunka

    ReplyDelete
  2. கடந்த அதிமுக அரசு மற்றும் தற்போதைய திமுக இரண்டு கட்சிகளும் எந்த வித பணி நியமனங்களையும் செய்யாமல் தற்காலிக ஆசிரியர் நியமனம் மட்டுமே செய்கின்றனர். இந்த இரண்டு கட்சிகளும் பி.எட் மற்றும் டீச்சர் ட்ரெயினிங் படித்துள்ள அனைவரும் இந்த இரு கட்சிகளும் இனி வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார்கள். வீட்டுக்கு வீடு இவர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த தேர்தலில் உணர்த்துவார்கள்.

    ReplyDelete
  3. அரசியல் செய்ய அறிவாளிகளை முட்டாளகிறார்கள் அரசியளால் கல்வித்துறையை காப்பாற்றுவது யாரோ

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Athaan Nithi Nilamai sari illayea...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி