2025 பிறந்து 2 மாதங்கள் கடந்த பின்பும் வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிடாத டிஆர்பி: ஆசிரியர்கள் அதிருப்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 6, 2025

2025 பிறந்து 2 மாதங்கள் கடந்த பின்பும் வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிடாத டிஆர்பி: ஆசிரியர்கள் அதிருப்தி

 

இந்த ஆண்டு பிறந்து 2 மாதங்களை கடந்​தும் இதுவரை வருடாந்திர தேர்வு அட்ட​வணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளி​யிடாத​தால் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்​தவர்​களும், பிஎட். பட்ட​தா​ரி​களும் அதிருப்தி அடைந்​துள்ளனர்.


அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்​கள், பட்ட​தாரி மற்றும் முதுகலை பட்ட​தாரி ஆசிரியர்​கள், சிறப்​பாசிரியர்​கள், வட்டார கல்வி அதிகாரிகள் (பிஇஓ) அரசு பாலிடெக்​னிக் கல்லூரி விரிவுரை​யாளர்​கள், அரசு கலை அறிவியல் கல்லூரி, அரசு சட்டக்​கல்​லூரி மற்றும் அரசு பொறி​யியல் கல்லூரி உதவி பேராசிரியர்​கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரை​யாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வாயிலாக தேர்வு செய்​யப்​படு​கிறார்​கள். மேலும், டெட் எனப்​படும் ஆசிரியர் தகுதித் தேர்​வை​யும் டிஆர்​பி-​தான் நடத்து​கிறது.


ஓராண்​டில் என்னென்ன போட்​டித்​தேர்​வுகள் நடத்​தப்​படும், அவற்றுக்கான அறிவிப்புகள் எப்போது வெளி​யிடப்​படும், தேர்​வுகள் எப்போது நடத்​தப்​படும் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்​களும் அடங்கிய வருடாந்திர தேர்வு அட்ட​வணையை டிஆர்பி ஆண்டு​தோறும் வெளி​யிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்ட​வணை​யில் கடந்த ஆண்டு டிசம்பர் அல்லது இந்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்​தில் வெளி​யிட்​டிருக்க வேண்​டும். ஆனால், 2025-ம் ஆண்டு பிறந்து 2 மாதங்கள் ஆகியும் இன்னும் வெளி​யிடாமல் டிஆர்பி காலம்​தாழ்த்தி வருகிறது. இதனால், அரசு பள்ளி ஆசிரியர் தேர்​வுகள் மற்றும் டெட் தேர்​வுக்கு தீவிரமாக படித்​துக்​கொண்​டிருக்​கும் ஆசிரியர்கள் வேதனை அடைந்​துள்ளனர்.


இதுகுறித்து இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர்கள் மற்றும் பிஎட் முடித்த பட்ட​தா​ரி​கள், முதுகலை பட்ட​தா​ரிகள் கூறிய​தாவது: டிஎன்​பிஎஸ்சி 2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்ட​வணையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்​திலேயே வெளி​யிட்டு​விட்​டது. ஆனால், டிஆர்பி இன்னும் வெளி​யிட​வில்லை. 2025 பிறந்து மார்ச் மாதம் வரவுள்ள நிலை​யில் வருடாந்திர தேர்வு அட்டவணை எப்போது வெளி​யாகும் என்பது தெரி​யாமல் தவிக்​கிறோம்.


இதுகுறித்து டிஆர்பி ஹெல்ப்லைன எண்ணில் தொடர்​பு​கொண்டு கேட்​டால், ‘விரை​வில் வெளி​யாகும் இணையதளத்தை பாருங்​கள்' என்று சொன்ன பதிலையே சொல்​கிறார்​கள். டெட் தேர்வு கடந்த 2023-ம்ஆண்டு நடத்​தப்​பட்​டது. கடந்த ஆண்டு நடத்​தவில்லை. இதனால் டெட் தேர்வை எதிர்​பார்த்து ஒரு லட்சத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்கள் காத்​திருக்​கின்​றனர். ஆனால் தேர்வு அட்ட​வணையை வெளி​யிடாமல் டிஆர்பி காலதாமதம் செய்​கிறது. இவ்வாறு அவர்கள் அதிருப்தி தெரி​வித்​தனர்.


கடந்த 2024-ம் ஆண்டு டிஆர்பி வெளி​யிட்ட தேர்வு அட்ட​வணை​யில் டெட், முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர் தேர்வு, ​மாவட்ட ஆசிரியர் ப​யிற்சி நிறுவன ​விரிவுரை​யாளர் தேர்வு ஆகிய 3 தேர்​வு​களுக்கான அறி​விப்பு​கள்கூட இதுவரை வெளி​யிடப்​பட​வில்லை என்பது குறிப்​பிடத்​தக்​கது.

4 comments:

  1. Extension-intension- no filling- tata bye bye-good bye- no posting upto another 10 years. Govt may dissolve TRB to save the salary

    ReplyDelete
  2. Dear Aspirant TRB Annual planner will Publish soon. So start for preparation for eligible post(UG/PG/DIET Lecturer/AP for Arts and Science/TET with confidence manner) for based on Revised New Syllabus.

    ReplyDelete
  3. PG TRB CHEMISTRY STUDY MATERIAL AVAILABLE( Based on New Syllabus Unit wise printed material -2 Volume) Proffessinally Chemistry Study centre at Nagercoil.Regular offline weekend Classes will start soon.( saturday and Sunday only). Further contact 9884678645.After completion of SET Examination those who eligible for AP will start preparation

    ReplyDelete
  4. அட்டவணையை விட்டுட்டு கிழிச்சிட்டாலும் அட்டவணையில் குறிப்பிட்ட தேதியில் எக்ஸாம் நடத்தி கிழிச்சிடுவாங்க போல

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி