தமிழ்நாடு பட்ஜெட் 2025 - முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? - உடனுகுடன் Update ... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2025

தமிழ்நாடு பட்ஜெட் 2025 - முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? - உடனுகுடன் Update ...

தமிழ்நாடு பட்ஜெட் 2025

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது...


தமிழக பட்ஜெட் 2025 - 26: செய்திகள் - உடனுக்குடன் - நேரலை!

TN BUDGET SPEECH - 2025 - Tamil.pdf

Download here

🎯 10:43 am, 14 மார்ச் 2025

இருசக்கர மின் வாகனத்துக்கு மானியம்

2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம்!


ரூ.152 கோடியில் 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள்! அமைக்கப்படும். இதன் மூலம் 1,308 மாணவர்கள் பயன்!


ரூ.100 கோடியில் சென்னை அறிவியல் மையம்!

🎯 10:43 am, 14 மார்ச் 2025

மகளிர் உரிமைத் தொகைக்கு ரூ.13,807 கோடி ஒதுக்கீடு


40 வயதுக்கு மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனைக்கான அட்டை வழங்கப்படும்.


இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டுத் திட்டம்

🎯  10:40 am, 14 மார்ச் 2025

அன்புச் சோலை 

மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் மூத்த குடிமக்களுக்கு அன்புச் சோலை மையங்கள் அமைக்கப்படும் என்று தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.


அதன்படி, முதியவர்களை பகல் நேரங்களில் பராமரித்துக் கொள்ளும் வசதியுடன் இந்த அன்புச் சோலைகள் இயங்கும் என்று தெரிய வந்துள்ளது.


ரூ.110 கோடியில் அமைக்கப்படும் அன்புச்சோலைகள் முதியோர் பகல் நேர பராமரிப்பு மையங்களாக செயல்படும்.


மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் மூத்த குடிமக்களுக்கு அன்புச் சோலை மையங்கள்.


🎯  10:33 am, 14 மார்ச் 2025

ஏஐ துறையில் புதிய படிப்புகள்

குன்னூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.


அரச பொறியியல் கல்லூரிகளில் ஏஐ உள்ளிட்ட நவீன தகவல் தொழில்நுட்பப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.


நகர்ப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு


கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி!


ஐந்து ஆண்டுகளுக்குள் உலக தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகத்தை முன்னிலைப்படுத்தவும், ஆசியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக மாற்றவும் நடவடிக்கை

அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மேலும் 15,000 இடங்கள் அமைக்கப்படும்.


வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் உருவாக்கப்படும்.


போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாநகராட்சிகளில் 1 லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்கள்.


ஏஐ உள்ளிட்ட துறைகளில் புதிய பட்டய மற்றும் பட்டப்படிப்புகள் உருவாக்கப்படும்.


🎯  10:29 am, 14 மார்ச் 2025

இது பள்ளிகளுக்கான அறிவிப்பு

முதல்வரின் காலை உணவுத் திட்டத்துக்கு பின்னர் பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது.


ரூ.3,796 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது.


மாணவர், ஆசிரியர்களின் நலன் கருதி மாநில அரசே நிதியை விடுவித்துள்ளது. தமிழக அரசே தனது சொந்த நிதியிலிருந்து முக்கிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளது.


அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரு.1,000 கோடி ஒதுக்கீடு.


அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரு.1,000 கோடி ஒதுக்கீடு.


ரூ.50 கோடியில் 500 அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும்.


மேலும் சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம். அதற்காக ரு.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்வு!


ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்வு!


ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்வு

🎯  10:19 am, 14 மார்ச் 2025

புதிய தங்கும் விடுதிகள்

ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள்!


சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள்!


வேளச்சேரியில் புதிய பாலம்! ரூ.310 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். இதன் மூலம் 7 இலட்சம் பேர் பயனடைவார்கள்.

🎯  10:18 am, 14 மார்ச் 2025

சென்னைக்கான திட்டங்கள்

கொருக்குப்பேட்டையில் ரூ.70 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.


ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park)!


ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம்

🎯  10:16 am, 14 மார்ச் 2025

10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள்

மகளிர் நலத் திட்டங்களுக்கு மகுடம் வைக்கும் திட்டம்தான் மகளிர் உரிமைத் தொகை.


வரும் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.37,000 கோடி கடன் வழங்கப்படும்.


ஊர்க்காவல் படையினருக்கு சமமான ஊதியம் மூன்றாம் பாலினத்தவருக்கும் தரப்படும்.


மகளிர் விடியல் பயணத் திட்டத்துக்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.


வரும் நிதியாண்டில் 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும்.


🎯  10:11 am, 14 மார்ச் 2025

சென்னையில் பல்லுயிர்ப் பூங்காக்கள்

ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள்!


ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park)!


🎯  10:08 am, 14 மார்ச் 2025

சென்னை அருகே புதிய நகரம்

சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய நகரம் உருவாக்கப்படும்.


மெட்ரோ வசதி, பேருந்துகள், சாலை வசதிகள் உள்ளிட்டவை உருவாக்கப்படும்.


நகர்ப்புற சதுக்கங்கள், பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகள் புதிய நகரில் அமையும்.

🎯 10:03 am, 14 மார்ச் 2025

கிராமச் சாலைகள்

முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம் 6100 கி.மீ. நீளம் அமைக்கப்படும். இதற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கீடு!


கலைஞர் கனவு இல்லம் ரூ.3,500 கோடியில் ஊரகப் பகுதிகளில் 1 இலட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.


ரூ.675 கோடி செலவில் 102 கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் செய்து தரப்படும்.


🎯 9:59 am, 14 மார்ச் 2025


தாமஸ் பிக்கெட்டியின் கூற்று

INEQUALITY IS A CHOICE, BUT WE CAN CHOOSE A DIFFERENT PATH என்பதன் தமிழாக்கம் "சமத்துவமின்மை என்பது ஒரு வாய்ப்பு, ஆனால் நாம் வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கலாம்" என்ற பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டியை மேற்கோள் காட்டி நிதியமைச்சர் உரையைத் தொடங்கினார்.


🎯 9:54 am, 14 மார்ச் 2025

ஒரு லட்சம் புதிய வீடுகள்

கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெறும்.


ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும். உலகத் தமிழ் ஒலிம்பியாட் ரூ.1 கோடி பரிசுத்தொகை!


ஊரகப் பகுதிகளில் ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.


ஊரகப் பகுதிகளில் மிகவும் பழுதடைந்த வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் ரூ.600 கோடியில் 25,000 வீடுகள்!


இந்திய துணைக் கண்ட வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும்.


ஈரோடு மாவட்டம் நொய்யல், ராமநாதபுரம் நாவாய் பகுதிகளில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். நொய்யல் பகுதியில் ரூ.22 கோடியில் அருங்காட்சியகம்.


2,329 கிராமங்களில் ரூ.1887 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

🎯 9:16 am, 14 மார்ச் 2025

வரும் நிதியாண்டுக்கான (2025 - 26) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவிருக்கிறது.


நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்னும் சற்று நேரத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார்..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி