கல்வி என்பது சொல் அல்ல ஆயுதம் , அந்த ஆயுதத்தை அனைவரும் பெறவேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் தலையாய நோக்கம் . அரசுப் பள்ளிகளே பெருமையின் அடையாளம் என்பதை உறுதிசெய்யும் பொருட்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்ககையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னை திருவல்லிக்கேணி அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர் நிகழ்ச்சி மார்ச் 1 - ஆம் தேதியன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில் மாண்புமிகு துணை முதல்வர் மற்றும் மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
அதனடிப்படையில் ஆக்கப்பூர்வமாகவும் துரிதமாகவும் செயல்பட்டு அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி முடித்த அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காகவும் அதிகமான மாணவர் சேர்க்கையை உறுதி செய்வதற்காக கல்வித் துறையில் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களிடையே ஆசிரியர்கள் மூலம் ஏற்படுத்தியமைக்காகவும் , இந்த 2025-26 ஆம் கல்வியாண்டில் 01.03.2025 முதல் 04.03.2025 வரை உள்ள நாட்களில் அதிகமான அளவில் மாணவர் சேர்க்கையை நிகழ்த்திக் காட்டியமைக்காகவும் தென்காசி மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி ) திரு . S. ஜெயபிரகாஷ் ராஜன் அவர்களை பாராட்டி மகிழ்வதில் பெருமையடைகிறேன் வருகின்ற நாட்களிலும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வயது மாணவர்களின் சேர்க்கையை உறுதிபடுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி