School Morning Prayer Activities - 03.03.2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2025

School Morning Prayer Activities - 03.03.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம்: பெருமை 

குறள் எண்:980


 அற்றம் மறைக்கும் பெருமை; சிறுமைதான்

 குற்றமே கூறி விடும்.


பொருள்:

பெருந்தன்மையுடையோர் பிறர் குற்றம் மறைத்து பேசுவர், குற்றமே கூறுதல் சிறுமையின் இயல்பு.


பழமொழி :

சுழலும் உலகம் அனைத்தையும் சுழற்றுகிறது.


The spinning world makes every thing rotate.


இரண்டொழுக்க பண்புகள் :   


*  பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர் எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன்.                     


 *பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் எனவே பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன் .


பொன்மொழி :


தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது எதுவுமே இல்லை.


பொது அறிவு : 


1. போபாப் மரம் எத்தனை லிட்டர் தண்ணீர் சேமிக்கும்? 


விடை:  1,20,000 லிட்டர்.       


2. உலகின் முதல் 6G  சாதனத்தை வெளியிட்ட நாடு எது? 


விடை:  ஜப்பான்


English words & meanings :


 Restaurant.   -     உணவகம்


 School.     -       பள்ளி


வேளாண்மையும் வாழ்வும் : 


 நீர் குறைவது மட்டும் அல்ல தவறான இடங்களில் அதிகப்படியான நீர் இருப்பதும் சுற்றுச்சூழல் அமைப்புகள், மக்கள், சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்பை ஆபத்தில் ஆழ்த்துகிறது.


மார்ச் 03 இன்று

உலகக் காட்டுயிர் நாள்


உலகக் காட்டுயிர் நாள் (World Wildlife Day) அருகிவரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவரயினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 இல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 68 ஆவது அமர்வில் “காட்டு விலங்குகள், மற்றும் தாவரங்கள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்” (CITES) மூலம் இந்நாளை உலகக் காட்டுயிர் நாளாக தாய்லாந்தினால் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இம்முயற்சியில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு திரைப்பட விழா, விழிப்புணர்வு கருதரங்கங்களை ஐ. நா நடத்திவருகிறது.


நீதிக்கதை


 ஒருநாள் காலையில் நாட்டின் ரா‌ஜா ஊரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க தனது குதிரையில் சவாரி செய்தார்.  பொழுது சாய்ந்தது.


இரவு நேரம் என்பதால் குதிரையை விட்டு இறங்கி அருகிலுள்ள ஆப்பிள் மரத்தடியில் உறங்க ஆரம்பித்தார்.ராஜாவிற்கு பசி அதிகரிக்க, நல்உணவு வேண்டும் என்று கடவுளை வேண்டினார். 


உடனே அந்த மரத்திலிருந்த பழம் ஒன்று கிளையிலிருந்து உதிர்ந்தது. அப்போது தான் ராஜாவிற்கு நாம் இருப்பது ஆப்பிள் மரத்தடியில் என்று நினைவுக்கு வந்தது கடவுள் 


தன் பசியைப் போக்க ஆப்பிளை கொடுத்துள்ளார் என்று நினைத்தவாறு நன்றி கடவுளே என்று தன் நன்றியை கடவுளிடம் தெரிவித்தார்.கீழே விழுந்த ஆப்பிள் பழத்தையும்  கையில் எடுத்து மண்ணை வாயில் ஊதி சுத்தம் செய்துவிட்டு சாப்பிட்டார். 


அப்போதும்  ராஜாவிற்கு பசி அதிகரிக்க மேலும் சில ஆப்பிள்களை ராஜா 


மரத்தின்மீது ஏறிப் பறித்து உண்டு தனது பசியைப் போக்கினார்.பூதம் ஏதேனும் இங்கு  இரவில் வருமோ என்று பயந்தார். உடனே அவருக்கு காய்ச்சல் வந்தது.  இரவு முழுவதும் தூங்காமல் 


பயத்துடன் மறுநாள்  காலையில் அரண்மனையை நோக்கித் தன் பயணத்தை மேற்கொண்டார்.


"எண்ணம் போல் வாழ்க்கை"என்பதுபோல் ராஜா உணவு வேண்டும் என்று நல்லதாக நேர்மறையாக நினைத்ததால் இந்த பிரபஞ்சம்  பழத்தை தந்து  உதவியது. பின்பு அவர் பூதத்தைப் பற்றி  எதிர்மறை எண்ணம் கொண்டதால் காய்ச்சல் வந்தது. 


நீதி:எண்ணம் போல் வாழ்க்கை நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.


இன்றைய செய்திகள் - 03.03.2025


* தமிழ்நாட்டில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளனர்.


* தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 – 3° செல்சியஸ்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் பிறப்பு சான்றிதழை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


* அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவடைந்தது. உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.


* உலக செஸ் தரவரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறினார் குகேஷ்.


* துபாய் ஓபன் டென்னிஸ் போட்டி: கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன் பட்டம் பெற்றார்.


Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி