110 விதியில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2025

110 விதியில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

 110 விதியில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:


பகுதிநேர ஆசிரியர்கள் இந்த வேலைக்கு சேர்ந்த இந்த 14 கல்வி ஆண்டுகளில்,

ஒருபோதும் மே மாதம் சம்பளம் மற்றும் அரசு சலுகைகள் கிடைக்கவில்லை.

தற்போது வழங்கப்படுகின்ற ரூபாய் 12,500/- என்ற குறைந்த தொகுப்பூதியத்தை வைத்து கொண்டு,

இன்றைய விலைவாசி உயர்வில்,

குடும்பத்தின் அடிப்படை தேவைகளைகூட செய்து கொள்ள முடியாமல்,

வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றார்கள்.

திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பணி நிரந்தரம் செய்தால் மட்டுமே,

பகுதிநேர ஆசிரியர்களுக்கு 
அரசு சலுகைகள் கிடைத்து, வாழ்வாதாரம் கிடைக்கும்.

இந்த 5 ஆண்டு சட்டசபை காலத்தின் முழு பட்ஜெட் இதுதான்.

இதில் பள்ளிக்கல்விக்கு 46,767 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த நிதியில் இருந்து காலமுறை சம்பளம் வழங்கி,
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 

கோரிக்கை மனுக்கள் போராட்டங்கள் மூலமாக வலியுறுத்தி வருகின்றார்கள்.

திமுக எதிர்கட்சியாக இருந்தபோது வலியுறுத்திய கோரிக்கையைதான் இப்போது,

அதிமுக காங்கிரஸ் பாமக விசிக பாமக மதிமுக ஓபிஎஸ் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தவாக கொமதேக மமக புரட்சி பாரதம் கட்சிகள் சட்டசபையில் வலியுறுத்தி உள்ளது.

மேலும், தேமுதிக தமாகா நாதக அமமுக எஸ்டிபிஐ மஜக தமமுக  ஆம்ஆத்மீ அதிமமுக ஆதமுக உள்ளிட்ட பல கட்சிகள் மக்கள் சபையில் வலியுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையில்,

பணி நிரந்தரம் குறித்து,

முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என

பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

எனவே, பல ஆண்டுகால தொகுப்பூதியத்தை கைவிட்டு,

காலமுறை சம்பளம் வழங்கி,

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு,

பணி நிரந்தரம் என்ற திமுக வாக்குறுதியை நிறைவேற்றி,

110 விதியில் அறிவிக்க வேண்டும்.

--
S.செந்தில்குமார்

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,

மாநில ஒருங்கிணைப்பாளர்,
  
செல் : 9487257203

1 comment:

  1. பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய உங்களுக்கு இன்னுமா மனம் வரவில்லை? தேர்தல் வாக்குறுதி 181 ! ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வீட்டுக்கு வீடு இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்! பி.எட் மற்றும் டீச்சர் ட்ரெயினிங் படித்துள்ள அனைவரும் விரக்தி. உங்களுடைய திமுக ஆட்சியில் எந்த நியமனம் இல்லை என்ற விரக்தி!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி