அரசுப் பள்ளிகளில் 1.17 லட்சம் மாணவர் சேர்க்கை: அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2025

அரசுப் பள்ளிகளில் 1.17 லட்சம் மாணவர் சேர்க்கை: அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்

 

தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஒரு மாதத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்தார்.


இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவச் சேர்க்கையை கடந்த மார்ச் 1-ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள்.


தற்போது சேர்க்கை தொடங்கியது முதல் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் 1-ம் வகுப்பில் ஒரு லட்சத்து 5,286 மழலையர்கள் உட்பட பிற வகுப்புகளுக்கும் சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 17,310 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல நம் அரசுப் பள்ளிகளே தலைசிறந்த முறையில் அடித்தளமிடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 comments:

  1. அரசு பள்ளியில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளார்கள் என்று பெருமை பேசிக்கொண்டால் மட்டும் போதாது அதற்கேற்றார் போல் ஆசிரியர் பணி நியமனங்களை புனிதமாக செயல்படுத்தி தீர்வு காண வேண்டுகிறேன் கடந்த ஆண்டுகளில் இதே போன்று தான் மாணவர் சேர்க்கை இருந்தது ஆனால் இன்றுவரை ஒரு ஒன்றாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கு ஆசிரியர் பணியிடங்களை கூட நிரப்ப வில்லை

    ReplyDelete
  2. 100 சதவீதம் உன்மமை

    ReplyDelete
  3. 100 சதவீதம் உன்மை

    ReplyDelete
  4. கடந்த நான்கு வருடமாக ஆசிரியர்களை நியமிக்காமல் அல்வா கொடுக்கப்பட்டது நன்றி

    ReplyDelete
    Replies
    1. எதுக்கு போஸ்டிங் போடணும். அதான் தற்காலிக ஆசிரியராக வேலை செய்ய வரிசை கட்டி நிற்கிறார்கள்

      Delete
  5. தற்காலிக ஆசிரியர் நியமனம் மட்டுமே செய்கின்றனர். அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் எக்கேடு கெட்டால் என்ன என்று நினைக்கிறார்கள் அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி