2025-26 நிதியாண்டிற்கான வருமான வரியைக் கணக்கிட்டுச் செலுத்தத் தயாரா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2025

2025-26 நிதியாண்டிற்கான வருமான வரியைக் கணக்கிட்டுச் செலுத்தத் தயாரா?

2025-26 நிதியாண்டிற்கான வருமான வரியைக் கணக்கிட்டுச் செலுத்தத் தயாரா?


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


இந்திய அரசிற்கு வருமான வரியாக மட்டும் ஆண்டிற்கு சுமார் Rs.4,000,00,00,000/- வரை செலுத்தி வரும் தமிழ்நாடு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் 2025-26ற்கான தங்களது வருமானவரியைத் துல்லியமாகக் கணக்கிட்டு IFHRMSல் மாதாந்திர வரிப்பிடித்தத்தை ஏப்ரல் மாதம் முதல் தொடங்கிட கீழேயுள்ள இணைப்பில் சென்று, Income Tax Calculator 2026ஐ Download செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


Budget 2025-26 அறிக்கையின் படி, நடப்பு  நிதியாண்டில் Old Regimeல் எந்தவித மாற்றமும் இல்லை. பழைய நடைமுறையே தொடரும்.


New Regimeல் கடந்த ஆண்டைப் போலவே Rs.75,000/- Standard Deduction உண்டு.


மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்துப்படியைக் கடந்த ஆண்டைப் போல கழித்துக்கொள்ளலாம். இதைத் தவிர்த்து வெறெந்தக் கழிவும் New Regimeல் புதிதாகச் சேர்க்கப்படவில்லை.


New regimeன் Tax Slab பின்வருமாறு மாற்றப்பட்டுள்ளது.

Rs.4,00,000 வரை                    - வரியில்லை

Rs.4,00,001 to Rs.8,00,000     - 5%

Rs.8,00,001 to Rs.12,00,000   - 10%

Rs.12,00,001 to Rs.16,00,000 - 15%

Rs.16,00,001 to Rs.20,00,000 - 20%

Rs.20,00,001 to Rs.24,00,000 - 25%

Rs.24,00,000க்கு மேல்           - 30%


Net Taxable income Rs.12,00,000/-க்குள் இருப்பின் Rs.60,000/- வரை U/S.87Aன் கீழ் Rebate உண்டு.


எனவே, Gross Income (Pay + DA + All other Allowances) Rs.12,75,004/- வரை உள்ளோருக்கு வருமான வரி வராது.


*Net Taxable income Rs.12,00,010/- முதல் Rs.12,70,580/- வரை இருப்பின் U/S.87Aன் கீழ் Rs.59,992/- முதல் Rs.7/- வரை  Marginal Relief கழிவு உண்டு.*


இதனால், Gross Income Rs.12,75,005/- முதல் Rs.13,45,584/- வரை உள்ளோருக்கு Rs.10/- முதல் Rs.70,580/- வரை வருமானவரியாக வரும்.


"அதெல்லாஞ்சரி, என்னோட சம்பளத்துக்கு வரி வருமா? வராதா? வந்தா எவ்ளோ வரும்? நியூ ரெஜிம் / ஓல்டு ரெஜிம் இதுல எது எனக்கு நல்லது?" என்பவை தான் உங்களது கேள்விகள் எனில், அனைத்திற்குமான சரியான விடையை ஒரே நிமிடத்தில் நீங்களே தெரிந்து கொள்ள, கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்குங்கள்; Arivuchaalaram IT Calculator 2026ஐ (Excel) Download செய்யுங்கள்; 2025 மார்ச் மாத ஊதியத்தை உள்ளிடுங்கள்.


https://arivuchaalaram.blogspot.com/2025/04/it-calculator-fy-2025-26.html

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி