கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 ல் பள்ளிகள் திறப்பு - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2025

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 ல் பள்ளிகள் திறப்பு - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு 24.04.2025 அன்று முடிவடைய உள்ளது . 25.04.2025 முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது.

தொடக்கக் கல்வி

ஆசிரியர்கள் விடைதாள் திருத்தும் பணியிணை முடித்து தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் 30.04.2025 எனத் தெரிவிக்கப்படுகிறது . 2025-2026 ஆம் கல்வியாண்டில் . 02.06.2025 ( திங்கள் கிழமை ) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது . எனவே . 02.06.2025 அன்று பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

2 comments:

  1. எல்லா வேலைகளையும் ஒப்பந்த ஊழியர்கள் போட்டு நிரப்பி விட்டு ஏழைகள் வயிற்றில் அடித்து விட்டு அரசியல் வியாதிகள் மட்டுமே கோடிகளில் புரளுங்கள். திமுக ஆட்சியில் நல்லது நடக்கும் என்று நினைத்து வாக்களித்து ஏமாற்றப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் இனி எப்படி வாக்களிப்பார்கள்?

    ReplyDelete
  2. இனி கீழ் நிலை பணி நியமனம் நிரந்தரம் கிடையாது என்று திமுக ஆட்சியில் அரசாணை வெளியீடு. இது கலைஞர் ஆட்சி அல்ல என்பதை நிரூபிக்கிறது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி