Apr 13, 2025
இடைநிலை ஆசிரியர்களுக்கான நியமன தேர்வு முடிவுகள் வெளியீடு!
TRB - POST OF SECONDARY GRADE TEACHERS – 2024 PUBLICATION OF EXAMINATION RESULTS OF TAMIL LANGUAGE AND FINAL KEY
2023-2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2024 , நாள் 09.02.2024 - ன்படி 21.07.2024 அன்று ஒளியியல் குறி அங்கீகாரம் ( Optical Mark Recognition ( OMR ) மூலம் தேர்வு நடத்தப்பட்டது . இத்தேர்வில் 25,319 தேர்வர்கள் கலந்து கொண்டனர்.
மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண் : WMP No.16353 of 2024 and batch cases தீர்ப்பாணை நாள் : 18.03.2025 ற்கிணங்க , மேற்காணும் போட்டித் தேர்வில் , Part . B- ல் தமிழ் மொழி வினாக்கள் கொண்ட " A " வகை வினாத்தாளுக்குரிய கேள்விகளுக்கான தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் ( Tentative Answer Key ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.gov.in- ல் 28. 03. 2025 அன்று Objection Tracker வெளியிடப்பட்டது.
உடன் தற்காலிக விடைக்குறிப்பிற்கு 28.03.2025 முதல் 03.04.2025 பிற்பகல் 5.00 மணி வரை தேர்வர்கள் இணையவழியில் தங்களது ஆட்சேபணைகளை ( Objections ) தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது . அதன் அடிப்படையில் மேற்காண் தேதிகளில் பெறப்பட்ட அனைத்து ஆட்சேபணைகளையும் பாடவாரியாக வல்லுநர்குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வுக்குப்பின் பாட வல்லுநர்கள் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளின் அடிப்படையில் Part . B- ல் தமிழ் மொழி வினாக்கள் கொண்ட வினாத்தாளினை எழுதிய தேர்வர்களது OMR விடைத்தாளினை கணினிமயமாக்கப்பட்ட மின்னணு செயல்முறை ( Computerised electronics process ) மூலம் மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.
தற்பொழுது இத்தேர்வில் , Part . B- ல் தமிழ் மொழி வினாக்கள் கொண்ட வினாத்தாளினை எழுதிய அனைத்து தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடைக்குறிப்புடன் இன்று வெளியிடப்படுகிறது.
மேலும் , பாடவல்லுநர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது. மேற்கொண்டு எவ்வித ஆட்சேபணைகளையும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்க இயலாது . பாட வல்லுனர்களின் முடிவே இறுதியாகும் .
நாள் . 12.04.2025 தலைவர்
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
2013 Batch, if anyone going to file Case, Let me know 8939601125
ReplyDelete