தொடக்கக் கல்வி - அரசு / அரசு உதவி பெறும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 2025-26 - ஆம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க அறிவுரை வழங்குதல் - தொடர்பாக .
2025-26 - ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவி பெறும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை கடந்த 3 நாட்களில் தினந்தோறும் பெறப்படும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் குறைந்த அளவிலேயே நடைபெற்றுள்ளது என தெரிய வருகிறது . நடப்பாண்டில் 5 இலட்சம் மாணவர்களை இலக்காக கொண்டு மாணவர் சேர்க்கை பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே , அனைத்து அரசு / அரசு உதவி பெறும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதி மற்றும் அருகாமை குடியிருப்பு பகுதிகளில் உள்ள 5 வயது நிரம்பிய மற்றும் பள்ளி வயது பிள்ளைகளை அரசின் நலத்திட்டங்களை எடுத்து கூறி உடனடியாக அரசு பள்ளிகளில் சேர்க்கை செய்வதற்கு ( Spot admission ) மேற்கொள்ளவேண்டும் . இப்பணியை பள்ளி வேலை நேரத்தில் மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் அறிவுறுத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் , இந்த முக்கியமான பணியை கருத்தில் கொண்டு , மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தி அதனை உடனுக்குடன் இவ்வியக்கத்தில் மூலம் அனுப்பப்பட்டுள்ள Google Form- ல் தினந்தோறும் பூர்த்தி செய்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி