இளநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு, தேர்வு நடக்கும் நகரங்கள் பட்டியலை, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, தேசிய தேர்வு முகமையின் தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான இளநிலை நீட் தேர்வு, மே 4ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்வு, நாட்டின், 552 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில், 14 நகரங்களில் நடக்க உள்ளது.
இதற்கு விண்ணப்பித்தோர், தங்களின் தேர்வு மையம் அமைந்துள்ள நகரம் பற்றிய விபரத்தை, தங்களின், 'லாகின்'க்குள் சென்று அறியலாம். இது தேர்வு மையம் பற்றிய தகவல் மட்டுமே; நுழைவுச்சீட்டு பின்னர் வெளியிடப்படும்.
இதை தரவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்னை இருந்தால், 011 - 4075 9000 மற்றும் 6922 7700 என்ற தொலைபேசி எண்ணிலோ, 'neetug2025@nta.ac.in' என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி