தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தது அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏமாற்றத்தை தருவதாக, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சங்கர் தெரிவித்தார்.
சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சலுகை அளித்ததை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிவிப்புகள் எல்லாமே எங்களிடம் இருந்து பணம் பெற்று செய்யக்கூடியவை. ஊதிய மாற்றத்தின்போது வழங்காத 21 மாத ஊதிய நிலுவைத் தொகை, கடந்த ஆட்சிக் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பு நிலுவைத் தொகை வழங்கப்படும், பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று, தேர்தல் வாக்குறுதியில் கூறியதை அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
பெண்களுக்கான மகப்பேறு விடுப்பை ஓராண்டாக நீட்டியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் மகப்பேறு விடுப்பில் செல்லும் ஆசிரியருக்கு பதிலி ஆசிரியர்கள் நியமிக்க அறிவிப்பு இல்லை. அரசு துறைகளில் 4.5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பில்லை. உயர் கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியராக மாற்றுவது, நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடித்து, பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை,” என்று அவர் கூறினார்.
நடுகல் என்னும் நன்றி மறவாப் பண்பாடு|பகுதி 1
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2025/04/1.html
அனைவருக்கும் பழைய முறையில் ஊக்க ஊதியம் தாருங்கள்
ReplyDeleteடேய் பொறம்போக்கு சாக்கடை பயலே ஏன்டா மக்கள் பிரச்சனைகளை தீர்க்காம இந்த லஞ்சம், ஊழல் பண்ணி ஒரு வேலையும் செய்யாம மக்களை அலயவிடும் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பென்ஷன் ஒரு கேடா? ஏன்டா ஒன்றுக்கும் லாயக்கில்லாத பயலே அதுக்கு மட்டும் பணம் இருக்காடா? டேய் மக்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்க பாருடா திருட்டு நாயே.
ReplyDeleteதகுதி தேர்வு தேர்ச்சி பெற்றும் உங்களுடைய ஆட்சியில் இன்னும் ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூட நிரப்ப வில்லை. இடைநிலை ஆசிரியர் நியமனம் ஏதும் இல்லை. எல்லா வேலைகளையும் ஒப்பந்த அடிப்படையில். வீட்டுக்கு வீடு இவர்கள் இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்! பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் என்று சொல்லி விட்டு தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால் சொன்னதைச் செய்வோம் என்று கூறும் இவர்கள் எதையும் செய்ய வில்லை.

ReplyDelete