ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு வரும் மே மாதம் ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2025

ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு வரும் மே மாதம் ?

2024-2025 ஆம் கல்வி ஆண்டு நிறைவு பெறும் நிலையில்...


இந்த ஆண்டுக்கு  ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு வரும் மே மாதம் நடைபெறும் என தெரிகிறது.


 ஒவ்வொரு ஆசிரியரும் EMIS இல் தங்களின் சுய விவரங்கள் அனைத்தும் மிக சரியாக இருப்பதை உறுதி செய்திடுங்கள்!! பிறந்ததேதி, முதன்முதலில் பணியில் சேர்ந்த தேதி, பதவி உயர்வு பெற்ற தேதி, தற்போது பணிபுரியும் ஒன்றியம் மற்றும் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியில் சேர்ந்த தேதி, பணிவரன்முறை மற்றும் தகுதிகாண் பருவம் முடித்த தேதி, தற்போது வகிக்கும் பதவி ஆகியவை மிக சரியாக இருப்பதை சரி பாருங்கள்.


 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்து 01-06-2006 இல் நிரந்தரம் செய்யப்பட்டவர்களுக்கு சென்ற ஆண்டு நடைபெற்ற கலந்தாய்வில் முதன்முதலில் பணியில் சேர்ந்த தேதி கணக்கில் எடுத்து கொண்ட காரணத்தால் அந்த தேதி சரியாக உள்ளதை சரி பார்த்து கொள்ளுங்கள். வேறு தகவல் இருப்பின் தொடர்ந்து வரும். நன்றி 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி