இனி நிரந்தர அரசு பணி கிடையாது… : அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2025

இனி நிரந்தர அரசு பணி கிடையாது… : அரசாணை வெளியீடு!

 

தமிழகத்தில் டிகிரி படிக்காதவர்களும் தற்போது நிரந்தரமாக அரசு வேலையில் சேரலாம். தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவர்கள் மற்றும் 8ஆம் வகுப்பு வரையில் படித்தவர்கள் ஆகியோருக்கு அவரவர் தகுதிகளின் அடிப்படையில் அரசு பணிகள் வழங்கப்பட்டு வந்தது. 


அதாவது, ஒவ்வொரு துறை அலுவலகங்கள், கல்லூரிகள், அரசு பள்ளிகள் என அனைத்திலும் ஒரு உதவியாளர், காவலாளி, தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.


அதுபோலவே நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, பொதுப்பணி, நீர்வளம் ஆகிய துறைகளில் தோட்டக்கலை தொழிலாளிகள்(நீராளர்), இரவு நேர காவலாளிகள், உதவியாளர்கள் இருப்பார்கள். இதுபோலவே தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் பணியிடங்கள் இருந்து வருகின்றன. இவர்கள் நிரந்தர பணியாளர்களாக இருந்து வந்தனர். 

No more permanent govt jobs in Tamilnadu


இந்த பணியிடங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலமாகவோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவோ நேர்காணல் நடத்தி நிரப்புவார்கள். 


இந்தநிலையில் அரசு முக்கிய அரசாணையை வெளியிட்டுள்ளது.முதற்கட்டமாக உயர்க்கல்வித் துறை இதற்கான அரசாணையை வெளியிட்டிருக்கிறது.  


மேற்குறிப்பிட்ட பணியிடங்களை இனி வரும் காலங்களில் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய முடியாது என TNPCR ACT 1976ல் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி இவர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்படுவார்கள் என்று இந்த அரசாணை கூறுகிறது. இதன்மூலம் குறிப்பிட்ட காலம் மட்டுமே இவர்களால் இந்த பணியில் இருக்க முடியும். No more permanent govt jobs in Tamilnadu


ஏற்கனவே அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பல ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தர பணி கேட்டு போராட்டத்தில் ஈடுபடும் நிலையில் இந்த அறிவிப்பு, சாதாரண அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த ஆணையானது எதிர்காலத்தில் எழுத படிக்கத் தெரிந்தவர்கள் முதல் 8ஆம் வகுப்பு வரை படித்தவர்களின் அரசு வேலை கனவு சிதையும் வகையில் உள்ளது. 


உயர்க்கல்வித் துறையை தொடர்ந்து மற்றத் துறைகளும் இதுதொடர்பான அரசாணையை வெளியிடும் என தகவல்கள் வருகின்றன.

2 comments:

  1. PG TRB CHEMISTRY CLASSES GOING AT NAGERCOIL. STUDY MATERIAL AVAILABLE( NEW SYLLABUS). PROFESSIONALLY CHEMISTRY INSTITUTE AT NAGERCOIL. FURTHUR CONTACT 9884678645

    ReplyDelete
  2. எல்லா வேலைகளையும் ஒப்பந்த ஊழியர்கள் போட்டு நிரப்பி விட்டு ஏழைகள் வயிற்றில் அடித்து விட்டு அரசியல் வியாதிகள் மட்டுமே கோடிகளில் புரளுங்கள். திமுக ஆட்சியில் நல்லது நடக்கும் என்று நினைத்து வாக்களித்து ஏமாற்றப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் இனி எப்படி வாக்களிப்பார்கள்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி