சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2025

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு


மே 8ஆம் தேதிக்குள் சிபிஎஸ்இ 10,12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்று 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதியிருக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை ஆவலோடு எதிர்பார்த்து வருகிறார்கள்.

இது தொடர்பாக நாள்தோறும் ஒரு தகவல் வெளியாகிக் கொண்டேதான் இருக்கிறது. பெற்றோரும் இதனால் அதிகக் குழப்பத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

முதலில் மே மாதம் இரண்டாம் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு சில நாள்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக உறுதி செய்யப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் சொன்ன தகவலின்படி, மே 8ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகிவிடும் என்றும், ஓரிரு நாள்களில் வெளியாக வாய்ப்பில்லை என்றும் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பு, சிபிஎஸ்இ வாரியம் ஒரு கூட்டத்தைக் கூட்டி, தேர்வு கட்டுப்பாட்டாளர் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை முடிவு செய்வார் என்றும், அதற்கான கூட்டம் இன்னும் நடைபெறவில்லை என்பதால், நாளை தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.

பொதுவாகவே சிபிஎஸ்இ, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை முன்கூட்டியே அறிவிக்கும் வழக்கம் இல்லாததால், மாணவர்களும் பெற்றோர்களும் சிபிஎஸ்இ இணையப் பக்கத்தை அவ்வப்போது பார்த்துக்கொள்ளவும், ஊடகங்களில் முக்கியச் செய்திகளை அவ்வப்போது பார்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 44 லட்சம் பேர் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள். 10ஆம் வகுப்புத் தேர்வை 24.12 லட்சம் பேரும், 12ஆம் வகுப்புத் தேர்வை 17.88 லட்சம் பேரும் எழுதியிருக்கிறார்கள்.

தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதளங்கள்




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி