அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு: பள்ளிக்கல்வித் துறை வழிமுறைகள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2025

அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு: பள்ளிக்கல்வித் துறை வழிமுறைகள் வெளியீடு

அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, தகுதியான முதுநிலை ஆசிரியர்கள் பட்டியல் தயாரிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பதவி உயர்வில் செல்ல விரும்பும் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களின் கருத்துருக்களை மட்டும் முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் அனுப்ப வேண்டும்.


அதேபோல், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வில் செல்ல விருப்பமுடையவர்கள் சார்பான கருத்துருகளை இயக்குநருக்கு பரிந்துரை செய்ய வேண்டியதில்லை. மேலும், 17-பி விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள மற்றும் தண்டனை காலம் முடிவடையாத முதுநிலை ஆசிரியர்களை பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்யக்கூடாது. இதில் தவறுகள் நடைபெற்றால் பரிந்துரைக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்களின் விவரங்களை கவனத்துடன் ஆய்வு செய்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்க நடவடிக்கை தேவை
    ஏராளமான தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணி ஒய்வில் சமீபத்தில் சென்று விட்டார்கள்.

    ReplyDelete
  2. பழைய செய்தி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி