வேலை நிறுத்த ஆயத்த மாநாடு மாற்றம் - ஜாக்டோ ஜியோ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2025

வேலை நிறுத்த ஆயத்த மாநாடு மாற்றம் - ஜாக்டோ ஜியோ


1 . 24.05.2025 அன்று நடைபெற இருந்த வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டிற்கு மாற்றாக நமது கோரிக்கைகள் தொடர்பாக அரசின் 9 அறிவிப்புகள் குறித்து ஜுன் 2 வது மற்றும் 3 வது வாரத்தில் அரசு ஊழியர் ஆசிரியர் , பணியாளர்கள் மத்தியில் விரிவான பிரச்சாரத்தை கொண்டு செல்வது என முடிவாற்றப்பட்டது.


2. PFRDA ரத்து செய்தல் , 8 வது ஊதியக் குழுவை உடனடியாக அமைத்தல் உள்ளிட்ட ஒன்றிய அரசின் ஊழியர் விரோத , மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தேசம் முழுவதும் கருத்தாலும் , கரத்தாலும் உழைக்கக்கூடிய அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் 2025 , ஜூலை 9 அன்று சுமார் 20 கோடி பேர் பங்கேற்கும் வேலை நிறுத்தத்தில் ஜாக்டோ - ஜியோ பங்கேற்பது என முடிவாற்றப்பட்டது.


3. ஜூலை மாதம் 3 வது வாரத்தில் மீண்டும் ஜாக்டோ - ஜியோ கூடி அடுத்த கட்ட நடவடிக்கையை திட்டமிடுவது என முடிவாற்றப்பட்டது .

8 comments:

  1. ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் வலுவான முறையில் செய்ய மாட்டார்கள் இப்படியே காலம் தாழ்த்தி கொண்டு தான் இருப்பார்கள் ஒரு தெளிவான முடிவெடுத்து இன்றைய தேதியில் கண்டிப்பாக வேலை நிறுத்தம் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்று முடிவு எடுக்க பழைய ஆட்கள் யாரும் இப்பொழுது இல்லை இப்பொழுது உள்ள நிர்வாகிகள் அனைவரும் தலைமையுடன் சமரசம் செய்து கொள்ளவே விரும்புகிறார்கள் பெயருக்கு போராட்டம் வேலை நிறுத்தம் ஊர்வலம் மாநாடு என அறிவிக்கிறார்கள் தெளிவான முறையில் முடிவெடுத்து அதில் உறுதியாக நிற்க தற்போதைய தலைவர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் யாரும் தயாராக இல்லை இதில் பாதிக்கப்படுவது அரசு ஊழியர்கள் தான் இந்த அரசு எப்பொழுதும் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வராது 2011 முதல் ஆட்சியாளர்கள் மாறி மாறி வரும் வரும் என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் நம்மளும் பணிக்கு சென்று வருகிறோம் ஆட்சியாளர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் நிர்வாகிகள் சங்கங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இப்படிதான் இனி வரும் காலங்களும் நடக்கும் பணியாளர்கள் அனைவரும் பழைய ஓய்வு திட்டம் வரும் என்று நம்பிக் கொண்டு காலத்தை ஓட்டுகிறார்கள் இதில் பலர் ஓய்வு பெற்று விட்டார்கள் பலர் இறந்து விட்டார்கள் இனிவரும் சில ஆண்டுகளில் பழைய ஆட்கள் அனைவரும் ஓய்வு பெற்று விடுவார்கள் பின் புதிய ஆட்கள் தான் நிர்வாகிகள் வருவார்கள் அவர்களிடம் பழைய வேகம் இருக்காது இதில் ஜெயிப்பவர்கள் அரசியல்வாதிகள் மட்டும்தான்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை

      Delete
    2. நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை

      Delete
  2. முதல் பணியாக சங்கத்தை கலைத்துவிட்டு வீட்டில் ஒய்வு எடுங்கள், நீங்கள் பணம் சம்பாதிக்க அரசு ஊழியர்களா கிடைத்தார்கள்?

    ReplyDelete
  3. அரசு ஊழியர்களை வைத்து சம்பாதிக்கும் கூட்டம் இந்த சங்கங்கள் ஏமாற வேண்டாம் அரசு ஊழியர்களே

    ReplyDelete
  4. சங்கங்களை நடத்துபவர்கள் அரசு ஊழியர்களின் பாபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகி குடும்பமே சீரழிந்து சின்னாபின்னமாகும் இது உறுதி

    ReplyDelete
  5. மற்ற மாநிலங்கள் பழைய ஒய்வூதியத் நிற்கும்,பதிய ஒய்வூதியத் திட்டத்திலும் இணைந்து விட்டது தமிழக அரசு பிடித்தம் செய்து ஒய்வூதிய பணத்தை மத்திய தொகுப்பில் செலுத்தாமல் தன்னிடம் வைத்துள்ளது,அந்த பணத்தை செலவும் செய்துவிட்டது ,இதை கேட்க சங்கங்களுக்கு தைரியம் இல்லை ,பெரிய அறிக்கை வேறு, நீங்கள் எல்லாம் மனிதர்களா உங்களுக்கு மனச்சாட்சி இல்லையா சங்க நிர்வாகிகளே?

    ReplyDelete
  6. நாட்டை கட்டி ஆண்டவர்கள் அழிந்து விட்டார்கள் ,இந்த சங்க நிர்வாகிகளுக்கு என்ன நிலை என்பதை சற்று சிந்தியுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி