மக்களிடம் மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களின் விளைவாக அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படும் போது அவற்றை சீரமைத்துக் கொள்ள, எந்த உணவை சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும், எந்தந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு, உடலுக்கு ஏற்ற உணவினை அறிந்துக் கொள்ள உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் உதவியை மக்கள் நாடுகின்றனர்.
கர்ப்பிணிகள், விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் உணவிலுள்ள ஊட்டச்சத்துக்களை முழுமையாகப் பெறுவதற்கும் உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை சரி செய்யவும் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைகள் அவசியமாகிறது என்பதால் ஊட்டச்சத்து மற்றும் திட்ட உணவியல் துறை படிப்புகளுக்கு மாணவர்களிடம் வரவேற்பு அதிகரித்து உள்ளது.
எப்படி சாப்பிட வேண்டும், எதை சாப்பிட வேண்டும், எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பதுடன் எத்தகைய உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது ஆலோசனைகளை வழங்குபவர் ஊட்டச்சத்து மற்றும் திட்ட உணவியல் நிபுணர்கள். அவர்களை உருவாக்குகின்ற படிப்புகள் குறித்து அறியலாம். இந்த துறையில் பட்டயப்படிப்புகளாக 1. உணவு மற்றும் சத்துணவியல், 2. பொதுசுகாதாரம் ஊட்டச்சத்துவியல் 3. குழந்தைகள் பருவ பராமரிப்பு ஆகியவை உள்ளது.
ஊட்டச்சத்து மற்றும் உணவியல் துறை மருத்துவம் சார்ந்த துறை என்றாலும் இந்த படிப்புக்கு எந்த நுழைவுத்தேர்வும் கிடையாது. ஆனால் ப்ளஸ் 2-வில் பயாலஜி, கெமிஸ்ட்ரி படித்தவர்களாக இருக்க வேண்டும். இளங்கலை படிப்பில் பிஎஸ்சி. ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை., மருத்துவ சத்துணவியல் மற்றும் உணவு முறை., உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்துவியல்., மனை அறிவியல் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகிறது.
முதுகலையில் உணவு மற்றும் சத்துணவியல், உணவு சேவை மேலாண்மை மற்றும் உணவு முறை., உணவு அறிவியல் மற்றும் சத்துணவியல்., உடற்பயிற்சி உடலியல் மற்றும் சத்துணவியல் ஆகிய படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த படிப்புகளை முடித்தவர்களுக்கு, உணவியல் நிபுணர், ஊட்டச்சத்து நிபுணர், உணவு தொழில்நுட்பவியலாளர், உணவு விஞ்ஞானி, ஊட்டச்சத்து ஆலோசகர், உடல்நலம் மற்றும் ஆரோக்கிய ஆய்வாளர், உணவுப் பொருள் மேம்பாட்டு மேலாளர் வேலை வாய்ப்பு பெறலாம்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டில் நிபுணர், ஆய்வகங்களில் உணவுப் பொருள்களை பரிசோதிக்கும் பணியில், உணவுத் தொழில்களில் தரக் கட்டுப்பாட்டில், சுகாதாரத் துறைகளில், ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறைகளில், சுகாதாரத்துறையில், உணவுப் பதப்படுத்துதலில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டில், உணவுப் பொருள்களின் பாதுகாப்பு, சுகாதாரத்துறையில் ஊட்டச்சத்து, உணவுப் பதார்த்தங்களின் ஊட்டச்சத்து மதிப்பு, உணவுப் பொருள் மேம்பாடு, உணவுப் பொருட்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி போன்ற துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.
சமூக நலன் மற்றும் மேம்பாட்டு துறை, பொது சுகாதாரம், மருந்து நிறுவனங்கள், இந்திய சுகாதார அமைச்சகம், உணவு பதப்படுத்துதல் துறை அரசு மற்றும் தனியார் ஆய்வு அமைப்புகள், உணவு தொழிற்சாலைகள், தனியார் மருத்துவமனைகள், சுற்றுலா நிறுவனங்கள், உணவு உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றில் விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணர், உணவியல் நிபுணர், மருத்துவ உணவியல் நிபுணர், சமூக உணவியல் நிபுணர், குழந்தை மருத்துவ நிபுணர் மற்றும் உணவியல் ஆலோசகர் என வேலைவாய்ப்புகள் உள்ளன.
தமிழகத்தில் பெரும்பாலான பல்கலைக் கழகங்களின் கீழ் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இந்த படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி