'மாணவர்கள் இல்லாத பாடத்துக்கு ஆசிரியரை நியமிக்க முடியாது' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2025

'மாணவர்கள் இல்லாத பாடத்துக்கு ஆசிரியரை நியமிக்க முடியாது'

 

மாணவர்கள் இல்லாத பாடத்துக்கு ஆசிரியர் நியமிக்கும்படி உத்தரவிட முடியாது என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர் நியமனம் வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, ஆசிரியர் தேர்வு வாரியம், 2021 செப்., 9ம் தேதி அறிவிப்பு வெளியிட்டுஇருந்தது.


இதில், 'பயோ கெமிஸ்ட்ரி' பாட ஆசிரியர் பணிக்கு, இந்திரா என்பவர் விண்ணப்பம் செய்தார். தேர்வு நடைமுறைகளில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற போதும், இறுதி அறிவிப்பாணையில், இந்திரா விண்ணப்பித்த பதவி இடம்பெறவில்லை.


இதையடுத்து, இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, தனக்கு பணி நியமனம் வழங்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்திரா வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

1 comment:

  1. பயோ கெமிஸ்ட்ரி is useless course

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி