தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2025

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய தகவல்

 

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த மாதம் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குபின் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


ஆனால், கோடை வெப்பம் காரணமாக பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்படலாம் விடுமுறை என தகவல் வெளியானது.


இந்நிலையில், தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.


அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், திட்டமிட்டப்படி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அதில் மாற்றமில்லை' என்றார்.

1 comment:

  1. ஜீன் 2 பள்ளிகளை திறக்க விடுங்கள் வீன் விவாதம் வேண்டாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி