சட்​டப் படிப்​பு​க்​கு விண்​ணப்​பிக்​க அவகாசம் நீட்​டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2025

சட்​டப் படிப்​பு​க்​கு விண்​ணப்​பிக்​க அவகாசம் நீட்​டிப்பு

 

தமிழ்​நாடு அம்​பேத்​கர் சட்​டப் பல்​கலைக்​கழகத்​தின் கீழ் 26 அரசு மற்​றும் தனி​யார் சட்​டக் கல்​லூரி​கள் (சீர்​மிகு சட்​டப்​பள்ளி உட்​பட) இயங்கி வரு​கின்​றன. இவற்​றில் 3 ஆண்டு எல்​எல்பி சட்​டப் படிப்​பு​களுக்கு 2,530 இடங்​கள் இருக்​கின்றன.


இதற்​கான இணை​யதள விண்​ணப்​பப் பதிவு கடந்த ஜூன் 16-ல் தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இது​வரை 12 ஆயிரத்​துக்​கும் மேற்பட்ட மாணவர்​கள் வரை விண்​ணப்​பித்​துள்​ளனர்.


இதற்கு விண்​ணப்​பிக்​கும் அவகாசம் ஜூலை 14-ம் தேதி​யுடன் முடிவடை​யும் என்று முன்பு அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்த அவகாசம் ஜூலை 25-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.


விருப்​ப​முள்ள மாணவர்​கள் www.tndalu.ac.in/ என்ற இணை​யதளம் வழி​யாக துரித​மாக விண்​ணப்​பிக்க வேண்​டும். கூடு​தல் விவரங்களை மேற்​கண்​ட வலைத்​தளத்​தில்​ அறிய​லாம்​ என்​று துறை அதி​காரி​கள்​ தகவல்​ தெரிவித்​தனர்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி