பொறியியல் மாணவர் சேர்க்கை: சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2025

பொறியியல் மாணவர் சேர்க்கை: சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது

 

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் சிறப்பு பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. 512 மாணவர்கள் பங்கேற்று, விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர்.


தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டு பிஇ, பிடெக் இடங்களில் சேர 2.49 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அதில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 641 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, கடந்த ஜூன் 27-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.


இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அரசுப் பள்ளியில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்த முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 12 பேர், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 137 பேர், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 363 பேர் என மொத்தம் 512 பேர் நேற்று கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.


முதல்நாள் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான இடங்களைதேர்வு செய்தனர். அவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை நேற்று இரவு வழங்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டை இன்று (ஜூலை 8) மாலை 5 மணிக்குள் அவர்கள் உறுதிசெய்ய வேண்டும். அதன் பிறகு, கல்லூரியில் சேர்வதற்கான இறுதி ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைனில் அவர்களுக்கு வழங்கப்படும்.இதர சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 11-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து, பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி இன்று சிறை நிரப்பும் போராட்டம் சென்னையில்! ஏமாற்றம்! ஏமாற்றம்! தேர்தல் வாக்குறுதி இன்னும் நிறைவேற வில்லை என்று ஏமாற்றம்!

    ReplyDelete
  2. இது கலைஞர் ஆட்சி அல்ல! படித்து விட்டு வேலை எதிர்பார்ப்பில் இருக்கும் ஏழைகள் முன்னேற்றம் அடைய வேலை வாய்ப்பு வழங்க! இந்த ஆட்சியில் இந்த ஆட்சி முடியும் தருவாயில் உள்ள நிலையில் கூட ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனம் ஏதும் செய்ய வில்லை. எங்கும் தற்காலிக ஆசிரியர் நியமனம் மட்டுமே செய்கின்றனர்! வீட்டுக்கு வீடு இவர்கள் இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்! பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் என்று சொல்லி விட்டு தேர்தல் வாக்குறுதி இன்னும் நிறைவேற வில்லை. எப்படி படித்தவர்கள் நம்பி வாக்களிப்பார்கள்? இவர்கள் கூறும் கட்சிக்கு தான் வீட்டில் உள்ள பெண்கள் வாக்களிப்பார்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி