CPS ஓய்வூதிய திட்ட ஊழியர்களின் 2024- 25 ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு தாள் 07/07/2025 அன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என கருவூல கணக்கு த்துறை அறிவிப்பு.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு 07.07.2025 அன்று காலை 10 மணிக்கு கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குநரகத்தால் ( பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பிரிவு ) வெளியிடப்படுகிறது . அத்துறையின் http://cps.tn.gov.in/public மற்றும் www.karuvoolam.tn.gov.in ( களஞ்சியம் ) பணியாளர் சுய சேவை ( Employee Self Sarvice ) என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . மேலும் , பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தின் தொகையினை களஞ்சியம் கைப்பேசி செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம் .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி